3 குழந்தைகளை எரிக்க முயன்ற தந்தை!!! ஆபத்தான நிலையில் ஒரு சிறுமி….


நெல்லையில் 3 சிறுமிகள் மீது வளர்ப்பு தந்தை மண்ணெண்னை ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோட்டை சேர்ந்த சுஜாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.  அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் கடியபட்டினத்தை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவர்கள் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

Also Read  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

நேற்று முன் தினம் குழந்தைகளான மாதேஷ், மகேஸ்வரி ஆகியோர் திண்பண்டம் வாங்க காவல்கிணற்றில் உள்ள இனிப்பகம் சென்றுள்ளனர். இருவரும் அடிக்கடி அந்த கடையில் திண்பண்டம் வாங்குவது வழக்கம். இரண்டு சிறுமிகளும் திண்பண்டம் வாங்கி சாப்பிட்டுவிட்டு திண்பண்டத்திற்கு காசு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கடை ஊழியர் அந்தோணிராஜிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி ராஜ் வீட்டிற்கு வந்து குழந்தைகளை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் , அருகில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மூன்று குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் மாதேஷ், மகராசி என்ற இரண்டு சிறுமிகளும் தப்பி வெளியில் ஓடிவிட்டனர். 10 வயது சிறுமி மகேஷ்வரி தீயில் சிக்கி கொண்டார். அப்போது அச்சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டிய தீயிட்டு கொளுத்திய கொடூர தந்தையிடன் மன்றாடி உள்ளார்.

அதற்குள் தீ சிறுமியின் உடல் முழுவதும் பரவியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அந்தோணிராஜை கைது செய்த பணகுடி போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Also Read  "நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முடிக்கு இவ்வளவு மௌசா…..! 2 கோடி மதிப்புள்ள முடி பறிமுதல்….

VIGNESH PERUMAL

ஒ.பி.எஸ்.ஸின் இளைய மகனும் அரசியல் விஜயத்துக்கு தயாராகிறார்?

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்…

suma lekha

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

வேல் யாத்திரையை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம்: பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

ரெட் அலர்ட் – சென்னையில் 45 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று…!

Lekha Shree

நடிகர் ரஜினி, ராகவேந்திர மண்டபத்தில் மீண்டும் அரசியல் கலந்துரையாடல்

Tamil Mint

காவல்துறையில் உலா வரும் பல ‘ராஜேஷ் தாஸ்’கள்! தொடரும் அவலம்!

Lekha Shree

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Tamil Mint

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா!!!

Lekha Shree

ஜோதிகாவின் படத்தால் வெளிவந்த உண்மை! – சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை..!

Lekha Shree

எகிறும் உயிர் பலி – தமிழகத்தில் ஒரேநாளில் 467 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree