பெப்சி தொழிலாளர்களுக்கு 40-50% வரை ஊதியம் உயர்வு – ஆர்.கே.செல்வமணி அதிரடி அறிவிப்பு!


பெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பள உயர்வு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் , “திரை உலகில் 24 சங்கங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சியுடன் சம்பள உயர்வு குறித்து நமது சங்கம் பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

இன்னும் சில சங்கங்களிடம் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இருசாராரும் இன்னும் கையெழுத்து போட்டு இறுதியும் செய்யவில்லை. இருசாராரும் சம்பள உயர்வு குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சம்பள உயர்வு முடிவு செய்யப்படவில்லை.

Also Read  "ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்" - மிஷ்கின்

அதற்குள் அதிக சதவிகிதம் சம்பள உயர்வு என்று பெப்சி தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்கள் அவசரகதியில் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் காரணம் என்ன? இந்த அறிவிப்பினால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி இறுதி செய்தபின் தயாரிப்பாளர் சங்கமும் , பெப்சியும் அது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின் தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவோம். அதன்பிறகுதான் சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும். அதுவரையில் இன்று நடைமுறையில் உள்ள சம்பளத்தையே தயாரிப்பாளர்கள் வழங்கிவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Also Read  சம்பளம் தரவே இல்லைங்க...! நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்...!

மேலும் இந்த கொரோனா மற்றும் ஓமைக்காரன் பிடியில் சிக்காமல் முக கவசத்தை படப்பிடிப்பு குழுவினருக்கு தவறாமல் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி படப்பிடிப்பு, பாடல் மற்றும் வசன பதிவு உட்பட அனைத்து திரைத்துறை பணிகளையும் எச்சரிக்கையுடன் தயாரிப்பாளர்கள் திரைப்பட பணிகளை கையாள வேண்டுகிறேன்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். தயாரிப்பாளர்கள் நலமுடன் இருந்தால்தான் நம்மை நம்பி இருப்பவர்களும் நலமுடன் இருப்பார்கள். சமூக அக்கறையுடன் தொழில் நுட்ப கலைஞர்களை காப்பதும் நமது கடமை” என்று அதில் தெரிவித்து உள்ளார்.

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் வெற்றி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணையத்தை தெறிக்கவிடும் ‘வலிமை’ BTS புகைப்படங்கள்…!

Lekha Shree

‘கேஜிஎப் 2’ பட அப்டேட் – “கேங்ஸ்டர்ஸ் நிறைந்திருக்கும் போது ‘மான்ஸ்டர்’ வருவார்!”

Lekha Shree

இன்று வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்! – ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Lekha Shree

முதல்வன்…! பாய்ஸ்…! சிவாஜி…! கே.வி.ஆனந்த் மரணம் குறித்து ஷங்கர் சொன்னது என்ன?

Devaraj

விஜய் 65-ல் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்?

Jaya Thilagan

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தனுஷின் ‘அசுரன்’…!

Lekha Shree

காளைகளுடன் பழகும் நடிகர் சூர்யா! வாடிவாசல் அப்டேட் இதோ..!

HariHara Suthan

மேஜிக் ஷாட்ஸ்: ரம்யா பாண்டியனின் அசத்தலான வீடியோ..!

Lekha Shree

‘படம் எப்படி இருக்கு ?’ – ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ Review ..!

Lekha Shree

“நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல” – மருத்துவர்

Lekha Shree

பாலாவின் இயக்கத்தில் இணையும் சூர்யா-அதர்வா?

Lekha Shree

“என்னத்த சொல்றது?” – ‘ஜெய் பீம்’ குறித்து இயக்குனர் பார்த்திபனின் பதிவு..!

Lekha Shree