சிவகங்கை: 7 அடி உயர முள்படுக்கையில் படுத்துக்கொண்டு அருளாசி வழங்கும் பெண் சாமியார்…!


7 அடி உயரமுள்ள முள்படுக்கையில் படுத்துக்கொண்டு பெண் சாமியார் ஒருவர் அருளாசி வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் கிராமத்தில் புகழ்பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலை நாகராணி அம்மையார் என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் கடந்த 45 ஆண்டுகளாக 48 நாட்கள் விரதமிருந்து இந்த முள்படுக்கையில் அமர்ந்தும், படுத்தும், நின்றும், ஆடியும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

மதுரை, சிவகங்கை மாவட்ட மக்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

Also Read  தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்நிலையில், இந்த ஆண்டு 45 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவையொட்டி நேற்று 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்ற பின்னர், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

Also Read  "சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை நிறைவேறும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

இதனை தொடர்ந்து நாகராணி அம்மையார் உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள் உள்ளிட்ட பல்வேறு முட்களால் ஆன 7 அடி உயர முள்படுக்கையில் அமர்ந்தும், நின்று கொண்டும், படுத்துக்கொண்டும், ஆடியபடியும் ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளி மாவட்ட மக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Also Read  "பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்… ஆண்களுக்கு கூடுதல் கட்டணம்" - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், பக்தர்களின் கஷ்டங்களை அம்மன் தாங்கி வருகிறார் என்ற நம்பிக்கையில் இங்கு பிரார்த்தனை செய்து கொண்டதாக கூறினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

#BREAKING:தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! – முழு விவரம் இதோ!

Shanmugapriya

தமிழகம்: கல்லூரிகளில் 6 நாட்களுக்கு நேரடி வகுப்புகள் கட்டாயம்..!

Lekha Shree

ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

Tamil Mint

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்!

suma lekha

ரிவல்டோ யானைக்கு சிகிச்சை; வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை அரசு ஊக்கமளிப்பது வருத்தமளிக்கிறது.. திமுக எம்.பி ட்வீட்

Ramya Tamil

தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார்..!

suma lekha

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு – தி.மு.க. எம்.பி. ரமேஷை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்?

Lekha Shree

தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்.!

suma lekha

முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்…! இது குறித்து தான் ஆலோசிக்க முடிவு…!

sathya suganthi