a

அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு – பெருமூச்சு விட்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத்!


சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 14வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் கண்டது.

ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத சன் ரைசர்ஸ் அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்யப்பட்டன. நியூசிலாந்து அதிரடி நட்சத்திரம் கேன் வில்லியம்சன் அணிக்குள் வந்தார்.

இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கழற்றிவிடப்பட்டு சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ள கேதர் ஜாதவ் ஆடும் லெவனில் களமிறங்கினார். காயம் காரணமாக நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துல்லியமாக பந்துவீசிய ஐதராபாத் நட்சத்திரம் புவனேஸ்வர் குமார் மூன்றாவது ஓவரிலேயே அதிரடி நட்சத்திரம் கே எல் ராகுலை அவுட்டாகி அசத்தினார்.

அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் 22 ரன்களில் நடையை கட்ட கிறிஸ் கெயில் 15 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறினர்.

இதனால் சீரிய இடைவெளியில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தமிழக வீரரான ஷாருக் கான் தனி ஆளாக நின்று ரன்களை குவிக்க போராடினார். 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர்கள் விளாசி 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கலீல் அஹமது பந்துவீச்சில் அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Also Read  மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தளர்வு!

பின்னர் வந்த வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறியதால் பஞ்சாப் கிங்ஸ் அணி 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களில் சுருண்டது. ஐதராபாத் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக கலீல் அஹமது 3 விக்கெட்டுகளையும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சித்தார்த், புவனேஸ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. கேப்டன் டேவிட் வார்னர் – பேர்ஸ்டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது.

Also Read  மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

பொறுப்புடன் விளையாடிய வார்னர் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபேபியன் அலென் பந்துவீச்சில் மயங்கி அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட மறுமுனையில் பேர்ஸ்டோவ் அரை சதம் விளாசினார்.

56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாச ஐதராபாத் அணி 18-வது ஓவரில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தியது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்து ஆச்சரியப்படுத்தியது.

Also Read  ஊதா கலர் தொப்பி - ஐபிஎல் ல அதிக விக்கெட் எடுத்தவர் இவரா?

அதன் வெற்றியை இணையத்தில் பலரும் மீம்ஸ்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

ஆட்டநாயகனாக அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தரவரிசையில் ஐதராபாத் அணி படு வேகமாக கடைசி இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி கடைசி இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும் பஞ்சாப் கிங்ஸ் அணி நாளை நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி யையும் எதிர்கொள்ள இருக்கிறது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

10 வருஷமா எங்க சி.எஸ்.கேல பெரிசா எதையும் மாத்தல – மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை! வெற்றியை சுவைக்குமா சிஎஸ்கே?

Lekha Shree

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj

சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Devaraj

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!

Jaya Thilagan

இனி நான் தான் ஓப்பனர் – கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

Devaraj

சென்னை அணியில் புதிதாக இணையும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி..

Jaya Thilagan

ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!

Devaraj

டெல்லி அணியின் கேப்டன் ஆகிறார் இந்திய அணியின் வளரும் நட்சத்திரம்!

HariHara Suthan

டெல்லி அணிக்கு வந்த சோதனை – அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா!

Lekha Shree

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj