மெட்ரோவில் முகக்கவசம் இல்லாமல் சென்றால் விதிக்கப்படும் ரூ.200 அபராதம் ரத்து..!


மெட்ரோ ரயில் வளாகத்திலும், ரயிலிலும் முக கவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் முக கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது.

Also Read  தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?அமைச்சர் விளக்கம்

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றி உள்ளதாகவும், அந்த சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அறிவிப்பை அமல்படுத்துவதற்கான அதிகாரிகள் எவரையும் குறிப்பிடவில்லை என்றும், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி வரை 87ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொகையை மாநில கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

Also Read  கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்! எங்கு தெரியுமா?

மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ரோ ரயில் சட்டப்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்களும் இந்த அபராதத்தை விதிப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அறிவிப்பு நல்ல நோக்கமாகவும், பொது நலனை கருத்தில் கொண்டு இருந்தாலும்கூட, அதற்கு சட்டத்தில் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும் என்றும், சட்ட அதிகாரம் பெறாத இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Also Read  'பப்ஜி' மதன் வழக்கு: குண்டாஸை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!

Lekha Shree

மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

Tamil Mint

5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

தமிழகத்தில் முதல்முறை – பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்!

Lekha Shree

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

நிவர் புயல்: அரசு அறிவிப்புகள்

Tamil Mint

#BREAKING:தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! – முழு விவரம் இதோ!

Shanmugapriya

பாலியல் தொல்லை வழக்கு: நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்..!

Lekha Shree

குடியரசு தின வாழ்த்து: தவறான தேசியக் கொடியை பதிவிட்ட நடிகை குஷ்பு – மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவு!

Tamil Mint