a

தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! – உ.பி.யில் கொடூரம்


தன் தாத்தாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு தெரிவித்த நபர் மீது உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் 19 பாதிப்பு உத்தரப்பிரதேசத்தில் அதிதீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய மாநிலத்தில் எந்த மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Also Read  பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று தவறான செய்தி பரப்புபவர்களை சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுமட்டுமல்லாமல் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து தவறான செய்தி பரப்புபவர்களை மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் யோகி தெரிவித்திருந்தார்.

Also Read  2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் - மத்திய நிதியமைச்சகம்!

இந்த நிலையில் ட்விட்டரில் சசாங் என்ற இளைஞர் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை டேக் செய்து தன்னுடைய தாத்தாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவு பலருக்கு சென்றடைந்தது. அந்த பதிவில் சசாங் குருநாதா நோயாளிக்கு ஆக்சிஜன் தேவை என்று குறிப்பிடவே இல்லை.

அவரை பலர் தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சில மணிநேரங்களுக்கு அடுத்து தன்னுடைய தாத்தா உயிரிழந்துவிட்டதாக சாசங் பதிவிட்டிருந்தார்.

விசாரணையில் அவருடைய தாத்தாவிற்கு கொரோனோ தொற்று இல்லை என்பதும் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Also Read  இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

அதனை அடுத்து அவர் மீது காவல் துறையினர் தற்போது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டும் என் தந்தைக்கே அர்ப்பணிப்பேன் – முகமது சிராஜ்

Tamil Mint

பாபர் மசூதி இடிப்பு வழக்கு -அத்வானி வாக்குமூலம்.

Tamil Mint

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

கொரோனா நோயாளிகளுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் – உ.பி. முதலமைச்சர் அதிரடி

Devaraj

கொரோனா தொற்றால் டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின் உயிரிழப்பு

sathya suganthi

மேலும் குறையப் போகும் வங்கிகளின் எண்ணிக்கை: அதிர்ச்சியில் ஊழியர்கள்

Tamil Mint

மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்: உலக அப்டேட் இதோ!

Lekha Shree

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்

Ramya Tamil

முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று

Tamil Mint