கொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல் பதிவு


நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு கோவோக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தோன்றிய ஒரே ஆண்டில் உருவாக்கி போடப்படுகிற இந்த தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் குறித்து ஆராய்வதற்காக தேசிய அளவில் மோசமான பாதகமான நிகழ்வுகளின் காரண மதிப்பீட்டு குழு (என்.ஏ.இ.எப்.ஐ.) அமைக்கப்பட்டது.

இந்த குழு 31 மோசமான பாதகமான நிகழ்வுகளின் காரணத்தை மதிப்பீடு செய்து வந்தது. அதன் அடிப்படையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு

அந்த அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயதான முதியவர் ஒருவர் ‘அனாபிலாக்சிஸ்’ என்று சொல்லப்படக்கூடிய கடுமையான ஒவ்வாமை எதிர்வினையால் இறந்து இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற முக்கிய அம்சங்களின் முழு விவரம் இதோ…!

பிப்ரவரி 5-ல் தடுப்பூசி போட்ட பின்னர் மரணம் அடைந்த 5 பேர், மார்ச் 9-ல் மரணம் அடைந்த 8 பேர், மார்ச் 31 ஆம் தேதி மரணம் அடைந்த 18 பேர் ஆகியோரது பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

ஏப்ரல் முதல் வாரத்தில் 10 லட்சம் டோஸ் தடுப்பூசிக்கு 2.7 இறப்புகளும், 4.8 சதவீத ஆஸ்பத்திரி சேர்க்கைகளும் நடந்ததாக தரவுகள் கூறுகின்றன.

Also Read  தங்கம் போன்ற வங்காளத்தை உருவாக்குவோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மரணங்களையும், ஆஸ்பத்திரிகளில் சேர்த்தலையும் கடுமையான பாதகமான நிகழ்வுகள் என வெறுமனே புகார் அளிப்பது, தடுப்பூசியினாலேயே அது நிகழ்ந்தது என தானாக குறிப்பிட்டு விட முடியாது.

ஒழுங்காக நடத்தப்பட்ட விசாரணைகள், காரண மதிப்பீடுகள் மட்டுமே நடந்த நிகழ்வுக்கும், தடுப்பூசிக்கும் இடையில் ஏதேனும் காரணமான உறவு இருக்கிறதா என்பதை புரிந்துகொள்வதற்கு உதவும்.

Also Read  உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

31 மோசமான பாதகமான நிகழ்வுகள் ஆராயப்பட்டன. அவற்றில் 18 பேர் மரணத்துக்கு தடுப்பூசிதான் காரணம் என கூற முடியாது. (தற்செயலாக நிகழ்ந்துள்ளது, தடுப்பூசிக்கும் இதற்கும் தொடர்பில்லை).

3 பேருக்கு ஏற்பட்ட பாதிப்பு அவர்கள் தடுப்பூசி தொடர்பானவை என வகைப்படுத்தப்பட்டது.

ஒன்று மட்டும் கவலை தொடர்பான எதிர்வினை என்றும், எஞ்சிய 2 பாதகமான விளைவுகள் வகைப்படுத்த முடியாதவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தன் தாய்க்கு படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடிய நபர்!

Shanmugapriya

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்த மேற்கு வங்கம்…!

Devaraj

கொலைக்கார கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

Devaraj

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint

கண்ணிவெடிகளை கண்டறியும் எலிக்கு ஓய்வு வழங்க அரசு முடிவு!

Shanmugapriya

தாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்!

Shanmugapriya

விவசாயிகள், அரசுக்கு இடையே இன்று ஏழாம் சுற்று பேச்சுவார்த்தை

Tamil Mint

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

Shanmugapriya

கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

sathya suganthi

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – 27 புது முகங்களுக்கு வாய்ப்பு: மோடியின் திடீர் முடிவு!

sathya suganthi

இது தான் கடைசி; மேரிகோம் அறிவிப்பால் அதிர்ச்சி!

Devaraj