121 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை!


இந்தியா 1900ஆம் நூற்றாண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தாலும், 121 ஆண்டுகளில் நீச்சல் போட்டியில் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார் மானா படேல் (21).

இவர் குஜராத்தை சேர்ந்தவர். தன்னுடைய ஏழு வயதிலேயே நீச்சல் பயிற்சியை தொடங்கியவர். தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

Also Read  “கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் முந்தைய சாதனையை முறியடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதே ஆண்டு ஒலிம்பிக் கோல்டு க்யூஸ்ட் போட்டியில் கலந்துகொண்ட முதல் இந்தியர் என்ற பாராட்டையும் பெற்றார்.

அதேபோல் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 72வது சீனியர் தேசிய நீச்சல் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தற்போது ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் கலந்து கொள்ளும் முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை படைத்துள்ளார்.

Also Read  பிப்ரவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம்

இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் கலந்து கொள்கிறார் மானா படேல்.

இதுகுறித்து மானா படேல் கூறுகையில், “கொரோனா ஊரடங்கில் நீச்சல் குளங்கள் மூடப்பட்ட நிலையில் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்வது கடினமாக இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இது வெறும் தொடக்கம்தான்; சவால்களை இதன் பிறகு தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

Tamil Mint

புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு

Tamil Mint

பார்சிலோனாவை தோற்கடித்த ரியல் மேட்ரிட் – அனல் பறந்த EL Clasico கால்பந்து ஆட்டம்!

Devaraj

சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Tamil Mint

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர்! – அதிர்ச்சியில் பயணிகள்

Shanmugapriya

தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு:

Tamil Mint

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பென் ஸ்டோக்ஸ்!

suma lekha

பறவை காய்ச்சல் பாதிப்பு – 17,000 கோழிகள், வாத்துகளுக்கு வந்த ஆபத்து

Tamil Mint

சூரியகுமார் யாதவுக்கு ஆதரவு குரல் கொடுத்த கௌதம் கம்பீர்!

Lekha Shree

முதல்வர் கருத்து…. இது கொஞ்சம் “ஓவரா தெரியல”… இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….

VIGNESH PERUMAL

சாதனை படைப்பதே என் இலக்கு – பவானி தேவி திட்டவட்டம்…!

Devaraj

“Go Corona Go” – கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

Lekha Shree