a

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!


ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைக்கப் போகிறார் பளுதூக்குதல் வீராங்கனை லாரல் ஹப்பார்ட். இவருக்கு வயது 43.

மாற்றியமைக்கப்பட்ட ஒலிம்பிக் விதிகளின் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் லாரல்.

ஆனால், நியூசிலாந்தின் பெண் வீராங்கனைகள் மத்தியில் இது சில எதிர்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு காயம் ஏற்பட்டதால் காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதல் அணியில் தமிழக வீராங்கனை தேர்வு!

அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு சமாமாவில் நடந்த பசிபிக் போட்டியில் தங்கம் வென்றார். மேலும், 2020ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த பளுதூக்குதல் உலக கோப்பையில் 87 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.

இப்படி பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு இருந்தாலும் ஒலிம்பிக் வாய்ப்பு அவருக்கு எளிதில் கிட்டவில்லை.

ஒவ்வொரு எடை பிரிவிலும் ஒரு நாடு ஒரு வீரரை ஒலிம்பிக் தொடருக்கு அனுப்பலாம். அதனால், சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் நியூசிலாந்து அணி லாரலை அனுப்புவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஆனால், இதற்கு அந்நாட்டின் பெண் வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு வரை ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு வந்த லாரல், 2015ல் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் செயல்படுத்திய மாற்றங்களுக்குப் பிறகு பெண்கள் பிரிவில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

Also Read  வரலாற்றில் முதன்முறை - சட்டப்பேரவைத் தேர்தலில் திருநங்கை போட்டி

தற்போது இவர் டோக்கியோவில் நடைபெறவுள்ள பளுதூக்குதல் போட்டியில் பெண்கள் பிரிவில் கலந்து கொள்வதன் மூலம் அது மற்ற பெண் வீராங்கனைகளுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக அவர்கள் எதிர்க்கிறார்கள்.

இதுபோன்ற வீரர்கள் விளையாட்டு துறை மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் சாதிப்பது குதிரைக் கொம்பாகவே இன்றளவும் உள்ளது!

Also Read  இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: பகல்-இரவு ஆட்டத்தில் சாதிக்குமா இந்தியா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறு பிள்ளையாக மாறிய இங்கிலாந்து பிரதமர்…! ரசித்து ஐஸ்கிரீம் உண்ட காட்சி…!

Devaraj

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்! – ஏன் தெரியுமா?

Shanmugapriya

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும்
இங்கிலாந்து அரச தம்பதி – புகைப்படத்துடன் அறிவிப்பு

Tamil Mint

தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! – வினோத சம்பவம்!

Shanmugapriya

44 நாடுகளுக்கு பரவியது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்…!

sathya suganthi

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

இனி நான் தான் ஓப்பனர் – கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

Devaraj

ஏவுகணையை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

Tamil Mint

பாஸ்போர்ட்க்கு பதிலாக ஸ்கேனிங் முறை – துபாய் விமான நிலையத்தில் அறிமுகம்

Jaya Thilagan