“சூறாவளிக்காற்று வீசக்கூடும்” மீனவர்களுக்கு எச்சரிக்கை…


தென்மேற்கு வங்க கடல், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் 2 தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது, இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும்  இதன் காரணமாக

 18.11.2021:  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம்   மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், திருச்சிராப்பள்ளி, கரூர் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

19.11.2021: திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Also Read  மதுரை: மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம்… சிறப்பு குழு ஆய்வு செய்ய அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு..!

20.11.2021: கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

21.11.2021: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

Also Read  பாலியல் வழக்கில் கைதாகும் அருமனை ஸ்டீபன்..காப்பாற்றுவாரா எடப்பாடி?

22.11.2021: வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:

Also Read  கவிதை நயத்தில் பேனர் வைத்த மதுப்பிரியர்கள்…! ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு நூதன கோரிக்கை…!

அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில்  கன மழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

18.11.2021: தென்மேற்கு வங்க கடல், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.11.2021: தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஒருவர் பலி

Tamil Mint

சிறையில் உள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் போக்சோவில் கைது!

Lekha Shree

தமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு

Tamil Mint

பிற்பகல் 1 மணி வரை காய்கறி, பழங்கள் விற்பனை – உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்? – லஞ்ச ஒழிப்புத் துறை துணை ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் நியமனம்!

Lekha Shree

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

sathya suganthi

விஜயகாந்த்துக்காக பிரேமலதா சிறப்பு பிரார்த்தனை

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க லஞ்சம்… 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

Lekha Shree

“ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி” – விஜயகாந்த் அறிவிப்பு

Lekha Shree

” சசிகலா ஜெயலிதாவிற்கு துரோகம் செய்யமாட்டார் ” – இல. கணேசன் பேட்டி

Tamil Mint

“விரைவில் நிலைமாறும்… தலைநிமிரும்..!” – சசிகலா அறிக்கை..!

Lekha Shree

பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ…!

Devaraj