மாற்றம் ஒன்றே மாறாதது : மெக்காவில் பாதுக்காப்பு பணியில் முதல் பெண் பாதுகாவலர்


மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அதனை மாற்ற இளவரசர் முஹம்மது பின் சல்மான், விஷன் 2030 என்ற பெயரில் தனது நாட்டில் பல்வேறு வளர்ச்சிக்கான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

அதில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுபாடு, ராணுவத்தில் பெண் படை ஆகியவையும் அடங்கும்.

இந்நிலையில் இந்த வரிசையில் மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண்கள் பணி அமர்த்தும் திட்ட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.

Also Read  டிரம்ப்புக்கு முதல் தோல்வி

அதன்படி மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோனா என்ற இளம் பெண். அந்த பெண் ராணுவ சீருடையாக காக்கி நிற ஆடையை அணிந்திருந்தார். ஆனால் அவரின் மேல் சட்டை இடுப்பு அளவுக்கு நீண்டிருந்தது, சற்றே தளர்வான கால்சட்டை, கறுப்பு தொப்பி, முகத்தை மறைக்க துணி ஆகியன அளிக்கப்பட்டுள்ளது.

காவலாளராக பணிபுரிவது குறித்து மோனா கூறுகையில், “நான் எனது தந்தையின் பாதையில் பயணிக்கிறேன். இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளேன். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி” என்று கூறினார்.

Also Read  பூதாகரமான நிறவெறி சர்ச்சை - கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து – விரைவில் அறிமுகம்

Devaraj

அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி விபத்து : 9 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு

sathya suganthi

தலைத்தூக்கும் கொரோனா 3வது அலை – நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பிரான்ஸ்…!

Devaraj

இந்திய உணவுக்காக எலிசபெத் ராணியின் டீ விருந்தை தவிர்த்த கிளிண்டன்? வெளியான உண்மை தகவல்!

Lekha Shree

உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக உருவெடுத்துள்ள டெலிகிராம்!

Tamil Mint

போட்டோவிற்கு போஸ் கொடுக்க நின்ற டிரம்ப்; சேர்ந்து நிற்காமல் சென்ற மெலானியா! – வைரலாகும் வீடியோ

Tamil Mint

விலங்குகளுக்கிடையே மலர்ந்த காதல்! – காதலர் தின ஸ்பெஷல் ஸ்டோரி!

Tamil Mint

பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணுக்கு 100 கசையடிகள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சுனாமி எச்சரிக்கை – அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

Lekha Shree

கோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“பாப் பாடகி ரிஹானா ஒரு முட்டாள்” – கங்கனா ரனாவத்

Tamil Mint