2 நாட்களில் 7.10 லட்சம் மின்னல்கள் – பற்றி எரியும் காடுகள்..!


பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மேற்கு ஆல்பர்ட்டா பகுதிகளில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1ஆம் தேதிகளில் மொத்தம் 7 லட்சத்து 10 ஆயிரம் மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

இதனால் வனப்பகுதிகள் பற்றி எரிந்தது. கனடாவில் மின்னல் தாக்குதலால் 135க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

மேலும், வார இறுதிக்குள் ஒரு லட்சம் ஹெக்டர் பகுதிகளை காட்டு தீ அழிக்கக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வனத்தை சுற்றி வசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

Also Read  பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் - அதிரவைக்கும் தகவல்கள்

1,300க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எத்தனை பேரைக் காணவில்லை என்பது தெரியவில்லை.

ரெட் கிராஸ் அமைப்பு குடும்பங்களை மீண்டும் இணைப்பதற்காக தொலைபேசி இணைப்பை அறிவித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அதிக எண்ணிக்கையிலான மின்னல் தாக்குதல்கள் வெப்ப அலைகளால் ஏற்பட்டுள்ளது. இது வளிமண்டலத்தில் அதிக அளவு ஈரப்பதத்தை உருவாக்கி பனி உருகுவது மற்றும் தாவரங்களிலிருந்து நீரை ஆவியாக்குவது போன்ற செயல்களை தூண்டும்” என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடாவின் வானிலை ஆய்வாளர் ஜொனாதன் பாவ் தெரிவித்தார்.

மேலும், இம்முறை ஈரப்பதம் வழக்கத்திற்கு மாறாக கடுமையான இடியுடன் கூடிய மழையை பொழிந்துள்ளது என கூறினார்.

Also Read  மஹாராஷ்டிரா: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி..!

இந்த காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும்: ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி

Tamil Mint

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

Lekha Shree

ஜப்பானுக்கு அருகில் உள்ள தீவில் ஏவுகணை தடுப்பை நிறுவியது ரஷ்யா

Tamil Mint

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலக தலைவர்கள்…! பட்டியல் வெளியீடு…!

sathya suganthi

கூட்டம் கூட்டமாக செதுத்து ஒதுங்கிய டால்பின்கள்…! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…!

Devaraj

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

ஆக்ரோஷமாக கொட்டிய நயாகரா சைலண்ட் மோடுக்கு மாறியதன் பின்னணி! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

1500 முகக்கவசங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட திருமண உடை…! அசத்திய டிசைனர்…!

Lekha Shree

இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேரை சுட்டுக்கொல்ல உத்தரவு – எதனால் இந்த தண்டனை தெரியுமா…?

Devaraj

அமேசானின் முன்னாள் தலைவர் Jeff Bezos இன்று விண்வெளி பயணம்…!

Lekha Shree