பணமோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது…!


ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது முன்னதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் வைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

சுமார் 20 நாட்களாக 8 தனிப்படை காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Also Read  தமிழகத்தில் 3ம் அலை தொடங்கியது? 2,000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

முன்னதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read  நாமக்கல், கரூரில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வுக்கு காரணம் இதுதான்..!

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில்,தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Also Read  "பாடப்புத்தகங்களில் இனி 'ஒன்றிய அரசு' தான்!" - திண்டுக்கல் ஐ.லியோனி

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் வைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

சுமார் 20 நாட்களாக 8 தனிப்படை காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

சாலை விதியை மீறியதால் பாலத்தில் சிக்கிய வாகனம்: நெடுஞ்சாலைத்துறை

Tamil Mint

ஒமைக்ரான்: 12 நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு..!

Lekha Shree

திரிபுரா: வன்முறை குறித்து பதிவிட்ட 2 பெண் நிருபர்கள் கைது..!

Lekha Shree

பீகார்: தேர்தலில் தனக்கு வாக்களிக்காத பட்டியலின மக்களை துன்புறுத்திய வேட்பாளர் கைது..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம்..இலவசம்..இலவசம்..!

suma lekha

“DOUBLE MUTANT” கொரோனா என்றால் என்ன?

Devaraj

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தொடங்கும் அன்னதானம்!

Lekha Shree

தொடர் கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழுவிவரம் உள்ளே..!

Lekha Shree

பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ: பரபரப்பு தகவல்கள்!

Tamil Mint

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு – சென்னை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree