அம்மா உணவகத்தில் கருணாநிதியின் புகைப்படம்..! மதுரையில் சலசலப்பு..!


மதுரையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் மறைந்து முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ம் ஆண்டு அம்மா உணவகங்களை தொடங்கினார். காலை இட்லி, பொங்கல் மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் கருவேப்பிலை சாதம் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

Also Read  சென்னையில் இன்று தோனிக்கு பாராட்டு விழா…!

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அம்மா உணவகம் மதுரை மாநகராட்சியில் 12 இடங்களில் செயல்படுகின்றன.

இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை 2015 மே 24 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

Also Read  10 ஆண்டுகள் கழித்து ஆட்சியமைக்கும் திமுக! மே 7-ம் தேதி பதவிபேற்பு!

அம்மா உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்கள் திடீர் நீக்கம் செய்துவிட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருக்கமான நபர்களை பணி அமர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த உணவகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எஸ்.பி.வேலுமணி மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி” – வானதி சீனிவாசன்

Lekha Shree

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் – மக்கள் அச்சம்!

Shanmugapriya

தமிழகம்: 5,000க்கும் கீழ் சென்ற கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

‘கட்டணமில்லா கல்வி’ – வியப்பளிக்கும் தனியார் கல்லூரியின் அசத்தல் அறிவிப்பு..!

Lekha Shree

சிபிஐ விசாரணை கோரும் சூரி

Tamil Mint

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Tamil Mint

20% இடஒதுக்கீடு போராட்டம்: முதல்வரை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

Tamil Mint

“போன் உரையாடலை ஒட்டு கேட்கிறார்கள்” – மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

Shanmugapriya

ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு சொந்தம்?… இன்று வெளியாகும் தீர்ப்பு..!

suma lekha

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.. இன்று பதவியேற்பு விழா!

suma lekha

கல்லூரிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பொன்முடி விளக்கம்..!

Lekha Shree

மீண்டும் தலைமைச் செயலகமாக மாறும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை?

Lekha Shree