1983 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மா காலமானார்…!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் 1983இல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யஷ்பால் ஷர்மா (66) காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் 1954ஆம் ஆண்டு ஷர்மா பிறந்தார். 1978ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். பின்னர், 1979ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

1982ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குண்டப்பா விஸ்வநாத் உடன் இணைந்து ஷர்மா பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த 314 ரன்கள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த இன்னிங்சில் ஷர்மா 140 ரன்களை சேர்த்தார். இந்த சாதனையை 22 ஆண்டுகள் கழித்து 2004ஆம் ஆண்டில் சேவாக்-சச்சின் பார்ட்னர்ஷிப்பில் எடுத்த 336 ரன்கள் முறியடித்தது.

Also Read  ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார் சர்மா. இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளிலும் 42 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 1,606 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 883 ரன்களும் சேர்த்துள்ளார். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஷர்மா இடம் பெற்றிருந்தார்.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் தமிழக வீரர் இடம்பெறுவதில் சிக்கல்!

இந்த உலகக் கோப்பையில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக 89 ரன்கள் சேர்த்தது ஷர்மா தான்.

அந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இதுவே அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஓய்வுக்குப் பிறகு சிலகாலம் களநடுவராகவும் அதன்பின் இந்திய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வராகவும் சர்மா இருந்தார்.

Also Read  தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை…!

இவருக்கு இரண்டு மகள்களும் ஷர்மா ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று மாரடைப்பின் காரணமாக ஷர்மா காலமானார்.

அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

கொரோனா 2ம் அலை: இவ்வளவு பேருக்கு வேலையிழப்பா? ஆய்வில் தகவல்..!

Lekha Shree

இத எதிர்பார்க்கவே இல்லையே! – சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்!

Shanmugapriya

உணவு கொடுத்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு…! கட்டியணைந்து அன்பை பறிமாறிய குரங்கு…! வைரல் வீடியோ…!

sathya suganthi

சென்னை-பெங்களூர் இடையே டபுள் டெக்கர் ரயில்

Tamil Mint

இந்திய கிரிக்கெட் வீரர் மாயாங் அகர்வால் வெளியிட்ட போட்டோ… கலாய்த்த நியூசிலாந்து வீரர்…!

Lekha Shree

மதம் மாற்ற முயன்றதாக புகார்…! ரயில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட கன்னியாஸ்திரிகள்…! நடந்தது என்ன?

Devaraj

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

Tamil Mint

கேரள விமான விபத்து: தமிழக பயணிகளின் கதி என்ன?

Tamil Mint

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்து ஓராண்டு நிறைவு…!

Devaraj

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree