பஞ்சாப் முன்னாள் முதல்வருடனான உறவு… விளக்கம் கொடுத்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்…!


பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதை அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது.

இதை தொடர்ந்து முதல்வராக இருந்த அமரிந்தர் சிங், செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

Also Read  மாடியில் இருந்து விழ இருந்தவரை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய வீடியோ…!

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். ஆனால் பா.ஜ.க.வில் இணைய வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார். கூடிய விரைவில், அமரிந்தர் சிங் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் கேப்டன் அமரிந்தர் சிங் குறித்தும், அவரது நண்பரும் பத்திரிகையாளருமான அரூசா ஆலம் குறித்தும் பஞ்சாப் துணை முதல்வர் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் அமரிந்தர் சிங்கின் நீண்டகால நண்பராக இருந்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் அரூசா ஆலம். பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, ”சீக்கிய மதத்தில் “காதல் விவகாரங்கள்” அனுமதிக்கப்படவில்லை. வேறொரு பெண்ணுடன் வாழ்வது தவறாகக் கருதப்படுகிறது. அரூசா ஆலம் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவில் கேப்டன் அமரிந்தருடன் நான் சண்டையிட்டேன்” என கூறியிருந்தார். மேலும், ஆலமின் ஐஎஸ்ஐ தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ரந்தவா கூறியிருந்தார். இதனால், பஞ்சாபில் அரசியல் சர்ச்சையில் இழுக்கப்பட்டுள்ளார் ஆருசா ஆலம்.

இந்த நிலையில், தனக்கும் அமரிந்தர் சிங்கும் உள்ள நட்பு குறித்து தவறாக கூறப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத்தில் இருந்து இந்தியா டுடேவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் ஆருசா ஆலம் கூறியுள்ளார். அதில், ஐஎஸ்ஐ உடனான தொடர்பு மற்றும் அமரிந்தர் சிங் பஞ்சாப் முதல்வராக இருந்தபோது, அவர் மீது செல்வாக்கு செலுத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் அரூசா ஆலம் மறுத்தார்.

Also Read  உத்தரப்பிரதேசத்தில் கொரோனா முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்…!

அமரிந்தர் சிங்குடனான உறவு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அரூசா ஆலம், ”நாங்கள் தோழர்கள், காதலர்கள் அல்ல. நாங்கள் துணையாக இருந்தோம். நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு வயது 56, அவருக்கு வயது 66. இவ்வளவு வயதில் நாங்கள் காதலர்களைத் தேடவில்லை. நாங்கள் நண்பர்கள், தோழர்களாக இருந்தோம். காதல் மற்றும் காதல் விவகாரங்கள் இல்லாத ஒரு கட்டத்தில் நாங்கள் சந்தித்தோம். நாங்கள் சிறந்த நண்பர்களாகவும் நல்ல குடும்ப நண்பர்களாகவும் இருந்தோம். நான் அவரது தாயார், அவரது குடும்பத்தினர், சகோதரிகளை சந்தித்துள்ளேன்” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முகேஷ் அம்பானியின் வலது கரம்…! ரூ.75 கோடி சம்பளம்…! அதிகாரி துறவியான கதை…!

Devaraj

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree

மத ரீதியான சர்ச்சை கருத்து..! மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்..!

Lekha Shree

டெல்லியில் உருகிய தார் சாலைகள்…! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை…!

Devaraj

“புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவங்கள!” – திருடன் அளித்த புகாரால் பரபரப்பு…!

Lekha Shree

காசு.. பணம்.. துட்டு.. மணி, மணி… ஒரே நாளில் லட்சாதிபதியான நபர்.!

suma lekha

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தாரா சச்சின் டெண்டுல்கர்?

Lekha Shree

கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற விவகாரம்: 1 வருடத்திற்கு பின் சரணடைந்த குற்றவாளி..!

Lekha Shree

டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்…!

Lekha Shree

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

Ramya Tamil