a

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!


அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.‌ அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து அங்கு காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 காவலர்கள் வந்தனர். புகார் தொடர்பாக விசாரிக்க ஜார்ஜ் பிளாய்டை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரி டெரிக் சாவின், ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார்.

தன்னால் மூச்சுவிட முடியவில்லை காலை எடுங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

Also Read  இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளாய்ட், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்துக்கு நீதிக் கேட்டு உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இனவெறிக்கு எதிராகவும் காவல்றையினரைக் கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 காவலர்கள் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

Also Read  கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்...!

டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  டெரிக் சாவுக்கு 40ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த தீர்ப்பு அமெரிக்க நீதி வரலாற்றில் மிகமுக்கியமான படி என்று தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், ஜார்ஜ் பிளாய்ட் மரணம், பகல் முழு வெளிச்சத்தில் நடந்த ஒரு படு கொலை என்றும் இனவெறி என்பது நாட்டின் ஆன்மாவுக்கு ஒரு கறை என்றும் கருத்து தெரிவித்தார்.

Also Read  இன்று உலக பிரா அணியாத தினம்,

பிளாய்ட் கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்காவில் காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், சிவில் உரிமைகள் இயக்கத்திற்குப் பின்னர் நாடு கண்டிராத ஒன்று என்றும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்ததாகவும் ஜோ பிடன் தெரிவித்தார்.

நீதியின் ஒரு அளவு சம நீதிக்கு சமமானதல்ல என்றும் இந்த தீர்ப்பு தங்களுக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது என்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். 

ஜார்ஜ் பிளாய்ட் வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்று அமெரிக்க மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் கலவரம்; வரலாறு காணாத சம்பவம்!

Tamil Mint

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்க மறுப்பு; துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்துகொள்ள முடிவு

Tamil Mint

கூகுள் – ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

Tamil Mint

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் கடும் தண்டனை

Tamil Mint

கொரோனா இறப்புகளை தடுப்பதில் ரெம்டெசிவர் மருந்து தோல்வி: உலக சுகாதார அமைப்பு.

Tamil Mint

ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் அதிகரிக்கும் பதற்றம்…! – 38 பேர் சுட்டுக்கொலை…!

Devaraj

தீப்பற்றிய விமானத்தை திறமையாக தரையிறக்கிய விமானிகள்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரியால் விபத்து – 36 ரயில் பயணிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

ஐநாவில் உரையாற்ற போகும் மோடி

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் நகரம்…!

Lekha Shree

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

Tamil Mint

பல பாம்புகள் தன் மீது விழுந்தபோதிலும் கேஷுவலாக பேசிக்கொண்டிருந்த நபர்! – சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Tamil Mint