a

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு குட்நியூஸ்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..


டெல்லியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்..

இந்தியா தற்போது கொரோனாவின் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்..

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை.. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. இதன் மூலம் 72 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் கூறினார்.

Also Read  தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

மேலும் பேசிய அவர் “ இதனால் 2 மாதங்களுக்கு ஊரடங்கு தொடரும் என்று அர்த்தமல்ல. நிதி பிரச்சினைகள் மூலம் ஏழைகளுக்கு உதவுவதற்காக இது செய்யப்படுகிறது.

டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு தலா ரூ .5000 வழங்க உள்ளது.. இந்த நிதி நெருக்கடியின் போது அவர்களுக்கு ஒரு சிறிய நிவாரணம் அளிக்கும்” என்று தெரிவித்தார்.

Also Read  கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் 'காலா' பட நடிகை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீதி மன்றமாக மாறிய படிக்கட்டுகள்

Tamil Mint

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

ரிஹானாவின் படத்தை எடிட் செய்த விஷமிகள்

Tamil Mint

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு – சுகாதாரத்துறை செயலாளர்

Devaraj

உ.பி.முதலமைச்சர் யோகியிடம் உதவி கோரிய ஆசியாவின் மிக உயரமான நபர்…! – என்ன கோரிக்கை தெரியுமா?

Devaraj

காவலரின் வீட்டில் திருடச் சென்று படுத்து உறங்கிய திருடன்! – தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்!

Shanmugapriya

மூட நம்பிக்கையால் முடிவுக்கு வந்த வாழ்க்கை…

Tamil Mint

ஜியோவை முந்திய ஏர்டெல்

Tamil Mint

அதிகரித்துள்ள மோடியின் சொத்து மதிப்பு

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

Tamil Mint

இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

Tamil Mint