a

ஜூன் 7 வரை முழு ஊரடங்கு….! புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்…!


தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. முழு ஊரடங்கை ஜூன் 7-ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், சிலவற்றுக்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன் முழு விவரம் இதோ…!

ஆங்கில, நாட்டு மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், செல்ல பிராணிகளுக்கான தீவன விற்பனையகங்கள் இயங்கலாம்.

பால், குடிநீர் மற்றும் நாளிதழ்கள் விநியோகிக்கலாம்.

வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழம் மற்றும் மளிகைப்பொருட்களும் அனு மதியுடன் விற்பனை செய்யலாம். ஆன் லைன் அல்லது தொலைபேசி வாயிலாக மளிகை பொருட்கள் ஆர்டர் பெற்று அவற்றை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதியுண்டு.

நியாயவிலைக் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணிவரை இயங்கலாம்.

பெட்ரோல், டீசல் நிலையங்கள், சமையல் எரிவாயு விநியோகத்துக்கு அனுமதி உண்டு.

காலை 6-10, பகல் 12-3, மாலை 6-9 மணி என மூன்று வேளையும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதியுண்டு. இந்த நேரங்களில் உணவு விநியோக நிறுவனங்கள் இயங்கலாம்.

மின்-வணிக நிறுவனங்கள் காலை 8 முதல் மாலை 6 மணிவரை இயங்கலாம்.

ரெயில்வே, விமானம், கப்பல் துறைமுக இயக்கம் அனுமதிக்கப்படுகிறது.

மின்சாரம், குடிநீர், சுகாதாரப் பணிகள், தொலை தொடர்பு, தபால் சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன.

பத்திரிகை ஊடகங்கள் பணிபுரிய அனுமதியுண்டு.

அத்தியாவசிய சேவைகளுக்கான தலைமைச் செயலகம், மருத்துவம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் இயங்க அனுமதி உண்டு.

ரத்த வங்கி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த சேவைகள் இயங்க அனுமதி உண்டு.

அவசர பயணங்களுக்கான விசா வழங்கும் மையங்கள் குறைந்த அளவு பணியாளர்களுடன் இயங்கலாம். அந்த பணியாளர்கள் நிறுவன அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதி உண்டு.

கண்காணிப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்களில் பணியாற்றுவோர் உரிய அடையாள அட்டை அல்லது இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணிகள், விவசாய பொருட்கள், இடுபொருட்கள் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு.

கால்நடை, கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட பண்ணைகள் இயங்க அனுமதியுண்டு.

குளிர்பதன கிடங்குகள், கிடங்குகள் உள்ளிட்டவற்றுக்கான சரக்கு கையாளும் சேவைகளும், துறைமுகங்கள், விமானம் மற்றும் ரெயில் நிலையங்கள், கண்டெய்னர் மையங்கள் தொடர்பான சேவைகளுக்கு அனுமதியுண்டு.

வீட்டில் இருந்து விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும், அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்கும் பயணம், பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு, தொடர் இயக்க தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ஏற்றுமதி நிறுவனங் கள் தங்கள் ஏற்றுமதி ஆர்டர்களை மேற்கொள்ளும் வகையில், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரம், கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் அனுமதியில்லை.

தொழிற்சாலைகள் ஒரு மாதத்துக்குள் தங்களது பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் அங்கு தங்கியிருந்து பணியாற்றுவோர் அனுமதிக்கப்படுகின்றனர்.

தன்னார்வலர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு மற்றும் இதர பொருட்கள் கொண்டு செல்வோர் உரிய இ-பதிவு அடிப்படையில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மாநிலங்களுக்குள்ளும், மாவட்டங்களுக் கிடையிலும், மாவட்டத்துக்குள்ளும் தனிநபர்கள் மருத்துவ அவசரங்கள் மற்றும் இறப்பு, இறுதிச்சடங்குக்கு செல்வதற்கு இ-பதிவு அவசியம். அதே போல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மூலம் வருவோர் இ-பதிவு மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் எவ்வித தளர்வுகளும் கிடையாது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நட வடிக்கை எடுக்கப்படும்

Also Read  தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதுமலையில் கடும் வறட்சி – காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!

Lekha Shree

மோடியை பின்னுக்கு தள்ளி யூடியூப்பில் சாதனை படைத்த ஸ்டாலின்!

Lekha Shree

களத்தில் சீறிப்பாயும் காளைகள்… உற்சாகத்துடன் திமில் ஏறும் வீரர்கள்… கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Tamil Mint

அனல் காற்று அபாயம் : 12 – 4 மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Lekha Shree

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Devaraj

கொரோனா பரவல் தடுப்பு – கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

Devaraj

வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் – டெல்லி விவசாயிகள்

Tamil Mint

“கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க ஏற்பாடு!” – தலைமை தேர்தல் ஆணையர்

Lekha Shree

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : எவற்றுக்கெல்லாம் தடை – முழு விவரம்

sathya suganthi

விஜய்யின் தந்தை பெயரில் கட்சி தொடங்க முடிவு? கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

காந்தியைப் போல் நேதாஜி படமும் ரூபாய் நோட்டில் வருமா?

Tamil Mint