பிக்பாஸ் இசைவாணி முன்னாள் கணவர் மீது மோசடி புகார்…!


விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் கானா பாடகி இசைவாணி.

இவர் தனது முன்னாள் கணவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கானா பாடகி இசைவாணி கடந்த 2019ம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். Casteless Collectives என்னும் இசைக்குழுவின் சார்பாக கானா பாடல்களை பாடி வருகிறார். அந்த இசைக்குழுவில் உள்ள ஒரேயொரு பெண் பாடகி இவர்தான்.

மேலும், பிபிசி வெளியிட்ட 100 சாதனைப்பெண்களின் பட்டியலில் இடம்பிடித்தார் இசைவாணி. பின்னர், விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

Also Read  'தி பேமிலி மேன் 2' வெப்தொடருக்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா..! குவியும் பாராட்டுக்கள்..!

இவர் தனது முன்னாள் கணவர் சதீஷை சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். அதன்பின்னர், சதீஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சதீஷ் சமூக வலைத்தளங்களில் விவாகரத்துக்கு பின்னரும் இசைவாணியை மனைவி என்று கூறி வருவதாகவும் அவரது புகைப்படங்களை பதிவிடுவதாகவும் இசைவாணி புகார் அளித்துள்ளார்.

Also Read  காதல் மனைவியின் பெயரை பச்சைகுத்திக்கொண்ட சினேகன்..! வீடியோ இதோ..!

மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரது பெயரில் ஆர்கெஸ்டரா ஒன்றை நடத்தி இவரது பெயரை உபயோகித்து பணம் பெறுவதாகவும் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி குறித்து இசைவாணியை அணுகியபோது தான் இது தெரியவந்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இசைவாணி புகார் அளித்துள்ளார்.

Also Read  திமுகவில் மீண்டும் மு க அழகிரி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

TRP-ல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்…!

Lekha Shree

பாலியல் புகாருக்கு ஆதாரம் கேட்ட அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்? நடந்தது என்ன?

Lekha Shree

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

ஓடிடியில் வெளியாகும் தனுஷின் ‘மாறன்’ திரைப்படம்?

Lekha Shree

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

Devaraj

அன்னபூரணி ‘அம்மா’வுக்கு போட்டியாக களமிறங்கிய டிக்டாக் சாதனா!

suma lekha

உணவில் விஷம் வைத்து கொலை! – வாயில்லா ஜீவன்களுக்கு அரங்கேறும் கொடூரம்!

Lekha Shree

திருப்பதிக்கு பக்தர்கள் இப்போது வர வேண்டாம்! – தேவஸ்தானம் அறிவிப்பு..!

Lekha Shree

மரியாதை தராத மாமியாருக்கும் மச்சினிக்கும் உணவில் விஷத்தை வைத்த மாப்பிள்ளை….

VIGNESH PERUMAL

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

நாளை நாடு முழுவதும் மீலாதுன் நபி திருநாள் கொண்டாட்டம்

Tamil Mint