“சம்பாதிப்பது கோடி… கொடுப்பது லட்சம்..” – நடிகர் சூர்யாவை விமர்சித்த காயத்ரி ரகுராம்..!


நடிகையும் பாஜக கலாச்சாரப் பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம், “ராஜாகண்ணு மனைவி பார்வதியின் நிஜவாழ்க்கை கதையின் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்த நடிகர் சூர்யா அனைவரும் கேள்வி எழுப்பிய பின்னர் லட்சங்களை தருகிறார்” என விமர்சித்துள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி வருகின்றன.

சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

Also Read  "Live Your Life!" - சமந்தாவுக்கு அட்வைஸ் செய்த வனிதா…!

காவல்துறை சித்திரவதையில் உயிரிழந்த ராஜாகண்ணு என்ற பழங்குடி நபரின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக நடிகர் சூர்யா தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக கலை, கலாச்சாரப்பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பார்வதியின் நிஜவாழ்க்கை கதை மூலம் நடிகர் சூர்யா சம்பாதித்தது கோடியில். எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு அவர்களுக்கு லட்சங்களை தருகிறேன் எனக்கூறுகிறார். சமூக நீதி…” என்று விமர்சித்துள்ளார்.

Also Read  பாலியல் துன்புறுத்தல் புகார்: பதவி விலகிய கே.டி. ராகவன்..! நடந்தது என்ன?

மேலும், “திமுக தொண்டர்கள், ரசிகர் பட்டாளத்தை உதயநிதியிலிருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யாவா? நான் குழப்பத்தில் இருக்கிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் சூர்யாவை ஆதரித்து பதிவிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்திடம், “ரஜினிகாந்த் சார் உங்களுக்கு இரண்டு பெரிய படங்களின் வாய்ப்பு கொடுத்த உங்களைப் பெரிய இயக்குனர் ஆகிவிட்டார்.

Also Read  அஜித்தின் 'வலிமை' குறித்த அதிரிபுதிரி அப்டேட்

ரஜினிசாரை திமுக ஆதரிக்கும் Plip Plip யூடியூப் சேனல் தகாத வார்த்தைகளால் திட்டினார். விமர்சித்தார். நீங்களும் சினிமா துறையையும் ஏன் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. ஆனால், ஒரு சமூகத்தை குறிவைத்த சூர்யாவை மட்டும் ஆதரிக்கிறீர்கள்.

உங்கள் நோக்கம் என்ன? யார் யாரை பிரிக்கிறார்கள்? சினிமாவை முழுமையாக திமுக கைப்பற்றியது. திமுக குடும்பத்தின் அடிமைகளாக சினிமா மாறிவிட்டது. சாதி மதம் இல்லாத ஒரே தொழில் சினிமா மட்டுமே. இப்போது அது தவறான கைகளுக்கு சென்று விட்டது” என கடுமையாக பேசியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எகிறும் உயிர் பலி – தமிழகத்தில் ஒரேநாளில் 467 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பாலியல் புகார் – மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது!

Lekha Shree

பணமோசடி வழக்கு – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது..!

Lekha Shree

நான் அரசியலுக்கு வரவில்லை – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

இப்போ திறந்தா கூட வெளியில போவேன்.! எனக்கு வலு இருக்கு.! : அபிஷேக்கின் எல்லைமீறிய பேச்சால் கடுப்பான பிரியங்கா

mani maran

மார்ச் 5-ல் மிரட்ட வரும் ‘மிருகா’! முழு வீச்சில் பிரமோஷன் வேலைகள்!

Bhuvaneshwari Velmurugan

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

கடைகளை திறக்க அழுத்தம் கொடுத்ததால் வெளியான அரசாணை” : மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!

Tamil Mint

சானிடைசர் தேய்த்துக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம்: தீயணைப்பு துறை எச்சரிக்கை

Tamil Mint

மீண்டும் தலைதூக்கும் ‘ஜெய் பீம்’ பட விவகாரம்…! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #SuriyaStopVanniyarHate …!

Lekha Shree

பதிலடி கார்ட்டூனாம்-சுதீஷ் விளக்கம்

Tamil Mint

ஓடிடியில் ரிலீசாகும் ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்?

Lekha Shree