a

PSBBக்கு எதிராக மாடல் அழகி புகார் கூறுவதா? – வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்…!


சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார், ஒரு மாடல் அழகி மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என, தமிழக பா.ஜ.க. பிரமுகர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தியை குறிவைத்து, பரபரப்பாக்கி வருகின்றனர் என்றும் இதற்கு, அவர்கள் இருவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது தான் காரணம் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகம்: முழு ஊரடங்கின் போது மதுபானக் கடைகள் இயங்க தடை!

ஜாதிய ரீதியில், பிஎஸ்பிபி பள்ளியை வீழ்த்த வேண்டும் என்பது பலரின் டார்கெட்டாக உள்ளதென்று கூறிய காயத்ரி, நடந்த சம்பவத்தில் குற்றம் இழைத்தவர் ஆசிரியர் ராஜகோபாலன், அவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் பள்ளியையும், பள்ளி நிர்வாகத்தையும் வம்புக்கு இழுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பு உள்ளார்.

தான் பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், ஒய்எஸ்பி உறவினர் என்ற நிலையிலும் தனக்கு பிஎஸ்பிபியில் சீட்டு கிடைக்கவில்லை என்று கூறிய காயத்ரி ரகுராம், சீட்டு கிடைக்காத கடுப்பில் சிலர் இந்த பிரச்சனையை பெரிதாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read  PSBB பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கொரோனா பிரச்சனையை மறைக்க, பாலியல் பிரச்சனைகள் எங்குமே நடக்காதது போன்ற தோற்றத்தை உருவாக்கி பெரிதுபடுத்துவதைத் தன்னால் ஏற்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பள்ளியில் படித்த ‘மாடல்’ கிரிபாலி சாம்டாரியா என்பவர் தான், பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்திருக்கிறார் என்றும் அந்தப் புகாரில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது, போலீஸ் விசாரணைக்குப் பின் தெரிய வரும் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Also Read  ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் பிடிவாதம்

Tamil Mint

தென்மேற்கு பருவமழை தொடங்கியது… அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Devaraj

இரவு நேர ஊரடங்கு – பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

Lekha Shree

“நானும் ரெளடி தான்” போலீசை மிரட்டிய பெண்! வைரஸ் வீடியோ!

Lekha Shree

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

PSBB பள்ளியில் நானும் மதுவந்தியும் டிரஸ்டிதான் – ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்

sathya suganthi

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு…!

Lekha Shree

TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம்!

Tamil Mint

சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

Devaraj

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

Devaraj

தீபாவளிக்கு கிட்டத்தட்ட 15,000 சிறப்பு பேருந்துகள்

Tamil Mint