“விஜய் ரியல் ஹீரோதான்!” – விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காயத்ரி ரகுராம்!


நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில்,”நடிகர் விஜய் ரியல் ஹீரோதான். அவர் நிறைய ஏழை மக்களுக்கு உதவுகிறார். முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்திருக்கிறார்.

பல மாணவர்களை படிக்க வைக்கிறார். ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவுகிறார். அதனால் இதையெல்லாம் மறந்துவிட்டு நீதிமன்றத்தில் நடந்ததை பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் செய்த நல்ல விஷயங்களை மறக்க கூடாது ” என தெரிவித்துள்ளார்.

Also Read  வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.

Also Read  கமலுடன் செல்ஃபி எடுத்த பகத் பாசில்! - சூடுபிடிக்கும் 'விக்ரம்' படப்பிடிப்பு…!

மேலும், “நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்கவேண்டும். சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது.

சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல. நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு” என கருத்து தெரிவித்தார்.

Also Read  மக்கள் செல்வனின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர் இன்று வெளியீடு!

இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக வரி கட்டுங்க விஜய் மற்றும் வரி ஏய்ப்பு விஜய் போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி ட்ரெண்ட் ஆனது. இதனிடையே விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

Lekha Shree

“தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான்; நாம் தமிழர் அல்ல” – கே.எஸ். அழகிரி

Shanmugapriya

“தளபதியே சொல்லிட்டாரு… எனக்கு இது போதும்” – மகிழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ கவின்!

Lekha Shree

ஆர்.பி.சவுத்ரி, விஷாலுக்கு போலீஸ் சம்மன்…!

Lekha Shree

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

தனுஷ் குரலில் வெளியானது ‘திரெளபதியின் முத்தம்’ பாடல்… அரை மணி நேரத்தில் இத்தனை லட்சம் வியூஸ்களா?

malar

தலைகீழாக யோகா செய்யும் ரம்யா பாண்டியன்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மணி ரத்னத்துக்கு பிறந்த நாள்…! வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்…!

sathya suganthi

குடிப்பழக்கத்துக்கு குட்பை சொன்ன சிம்பு! – அவரே தெரிவித்த தகவல்!

Lekha Shree

பிக்பாஸ் 5வது சீசன் எப்போது ஆரம்பமாகும்?

Lekha Shree

வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

Lekha Shree

இந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகலாம்.. ஏன் தெரியுமா..?

Lekha Shree