குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!


சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படும். 

சென்னையில் தினசரி 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 4 மண்டலங்களை தனியாருக்கு அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பல்வேறு பணிகள் நடைபெற்றாலும் சென்னையில் குப்பை மேலாண்மை முறையாக செய்யப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. 

கொரோனா காரணமாக செயல்படுத்த முடியாத நிலையில் வரும் 2021 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில், குப்பை கொட்டுபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவும், விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Also Read  7 பேர் விடுதலையில் இழுபறி: ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் பேச்சு!

இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, குப்பை கொட்டுவதற்கு வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், நட்சத்திர விடுதிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், தியேட்டர்களுக்கு ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், அரசு அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையிலும், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகள் ரூ.500 முதல் ரூ.1000 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Also Read  சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? - எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ேஹாம்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும், தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 முதல் ரூ.3000 ஆயிரம் வரையிலும் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி குப்பையை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு ரூ.500, தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5000, கட்டுமான கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் ரூ.2000 முதல் ரூ.5000, குப்பை எரித்தால் ரூ.500 முதல் ரூ.2000 அபராம் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

Lekha Shree

“கொரோனா 2ம் அலை சுனாமி போல் வருகிறது…!” – எச்சரிக்கும் அதிகாரி..!

Lekha Shree

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!

Tamil Mint

எடப்பாடி தொகுதியில் ஸ்டாலின்…! ஸ்டாலின் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி…! முழு விவரம் உள்ளே…!

Devaraj

தமிழக அரசில் அடுத்த கட்ட நகர்வு, மூத்த அதிகாரிகளின் டெல்லி பயணம் இதற்குத்தானா?

Tamil Mint

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

suma lekha

பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற தடை – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

தமிழகம்: முழு ஊரடங்கின் போது மதுபானக் கடைகள் இயங்க தடை!

Lekha Shree

தமிழகம்: 18 மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Mint

ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? – உதயநிதி ஸ்டாலின்

Tamil Mint

துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

Jaya Thilagan