கர்நாடகா: மரபணு மாற்றமடைந்த AY.4.2 வகை கொரோனா வைரஸால் 2 பேர் பாதிப்பு..!


கர்நாடகா மாநிலத்தில் மரபணு மாற்றம் அடைந்த AY.4.2 வகை கொரோனா வைரஸ் தாக்கத்தால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டெல்டா வகை கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

Also Read  கொரோனா 2ம் அலையின் எதிரொலி - கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

இந்த வைரசுக்கு AY.4.2 என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள ஒரு ஆய்வு மையத்தில் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வில் ஈடுபட்டபோது இரண்டு பேருக்கு இந்த வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Also Read  "தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம்" - அர்ஜுன் சம்பத் உறுதி..!

அதனால், உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், இந்த மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் பரவலால் மீண்டும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

Also Read  டி20 உலகக்கோப்பை - ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி..!

இதனால், மக்கள் கவனத்துடன் இருக்கவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே ட்வீட்டால் கிரிக்கெட் கடவுளுக்கு நேர்ந்த பங்கம்…! முழு அலசல் இதோ…!

Tamil Mint

40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் படுக்கையை தானம் செய்த 85 வயது முதியவர்!

Shanmugapriya

அனைத்து +2 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு… எந்த மாநிலத்தில் தெரியுமா?

Lekha Shree

கணவர் வீரமரணம் – ராணுவத்தில் இணைந்த மனைவி!

Lekha Shree

நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

முதல்வர் கருத்து…. இது கொஞ்சம் “ஓவரா தெரியல”… இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….

VIGNESH PERUMAL

TikTok Ban | டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

Tamil Mint

ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

Tamil Mint

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது

Tamil Mint

கொரோனா ஊரடங்கு : ஓட்டுநர் உரிமம் ரினிவல்…! அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம்..! – மத்திய அரசு

Lekha Shree

கொல்கத்தாவில் உள்ள உணவகத்தில் ஜாலியாக நடனமாடிய வயது முதிர்ந்த தம்பதி! – வைரலாகும் வீடியோ!

Tamil Mint