இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ள AY.4.2 வைரஸ்..! உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்..!


AY.4.2 என்னும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

Also Read  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - முப்படை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன?

இந்த வைரசுக்கு AY.4.2 என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வகை வைரஸ் டெல்டா வைரஸை விட 15% வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் மரபணு மாற்றம் அடைந்த AY.4.2 வகை கொரோனா வைரஸ் தாக்கத்தால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு… காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்..!

கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், இந்த மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் பரவலால் மீண்டும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வகை வைரஸ் இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

Also Read  ஜனவரியில் 16% அதிகரித்த கார் விற்பனை

இதனால், மக்கள் கவனத்துடன் இருக்கவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்கா கண்டனம்

Tamil Mint

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

Tamil Mint

முட்டை உண்ணும் அரிய வகை பாம்பு – 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு

sathya suganthi

கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் திடீர் ராஜினாமா, புதிய ஆளுநர் நியமனம்

Tamil Mint

விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனா 3ம் அலை தொடக்கம்? – டெல்டா வகையை போல வீரியமிக்க சி12 வகை தொற்று பரவல்..!

Lekha Shree

சேமிப்பு தாரர்களுக்கு நிர்மலா சீதாராம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி…!

Devaraj

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு விரைவில் டும் டும் டும்!

Shanmugapriya

பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

Lekha Shree

65 வயதில் பில் கேட்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு…!

sathya suganthi

27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகள் இயக்க முடிவு என தகவல்!

Shanmugapriya