ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை..!


அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டை கொன்ற முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட்.

லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.‌

அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து அங்கு காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 காவலர்கள் வந்தனர். புகார் தொடர்பாக விசாரிக்க ஜார்ஜ் பிளாய்டை விசாரணைக்கு அழைத்தனர்.

அப்போது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரி டெரிக் சாவின், ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார்.

Also Read  அடேங்கப்பா…. ரூ.25 கோடிக்கு ஏலம் போன போலி மோனலிசா ஓவியம்!

தன்னால் மூச்சுவிட முடியவில்லை காலை எடுங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளாய்ட், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்துக்கு நீதிக் கேட்டு உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இனவெறிக்கு எதிராகவும் காவல்றையினரைக் கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 காவலர்கள் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

Also Read  பேஸ்புக், வீடியோ கேம் மோகம் : தங்கையை சரமாரியாக வெட்டிக்கொன்ற அண்ணன்…!

டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது.

அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெரிக் சாவுக்கு 40ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்த தீர்ப்பு அமெரிக்க நீதி வரலாற்றில் மிகமுக்கியமான படி என்று தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், ஜார்ஜ் பிளாய்ட் மரணம், பகல் முழு வெளிச்சத்தில் நடந்த ஒரு படு கொலை என்றும் இனவெறி என்பது நாட்டின் ஆன்மாவுக்கு ஒரு கறை என்றும் கருத்து தெரிவித்தார்.

Also Read  அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி விபத்து : 9 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு

பிளாய்ட் கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்காவில் காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், சிவில் உரிமைகள் இயக்கத்திற்குப் பின்னர் நாடு கண்டிராத ஒன்று என்றும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்ததாகவும் ஜோ பிடன் தெரிவித்தார்.

நீதியின் ஒரு அளவு சம நீதிக்கு சமமானதல்ல என்றும் இந்த தீர்ப்பு தங்களுக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது என்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறினார்.

ஜார்ஜ் பிளாய்ட் வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்று அமெரிக்க மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

கோடிகளில் வருவாய் ஈட்டி அசத்தும் விவசாயிகள் – எப்படி தெரியுமா?

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி…!

sathya suganthi

கனடாவில் வாட்டி வதைக்கும் வெயில் – இதுவரை 486 பேர் உயிரிழப்பு…!

sathya suganthi

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

டொனால்ட் ட்ரம்பின் முந்தைய கொள்கைகளுக்கு செக் வைத்த புதிய ஜனாதிபதி பைடன்

Tamil Mint

இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்

Tamil Mint

3 மாதங்கள் கழித்து தனது கைக்குழந்தையை கண்ட தாய் !!!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானதா? – ஆய்வில் தகவல்

sathya suganthi

இந்தியாவிற்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு… சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து சோதனை!

suma lekha

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…! மனைவிக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கணவர்களே பொறுப்பு…

VIGNESH PERUMAL

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் உபயோகித்தவர் பலி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya