a

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!


நடிகர்கள் சரத்குமார், கவுண்டமணி நடித்த ஜானகிராமன் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி ஒன்று ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 10 ஆண்டுகளாக கட்டிலுக்கு கீழே பெண்ணுடன் குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்று இருப்பது போன்று அந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற ஒரு சம்பவம் கேரளா பாலக்காடு பகுதியில் நடந்துள்ளது. அயனூர் கிராமத்தை சேர்ந்த ரஹ்மானுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வயது 24. அவர் சாஜிதா (18) என்ற பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

சாஜிதா ரஹ்மானின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பெண். இவர்களது காதல் விவகாரம் தெரிந்து விட சாஜிதா ஒருநாள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். அதையடுத்து ரஹ்மானின் வீட்டுக்கு வந்த அவர் அவருடனே இருக்க விருன்புவதாக கூற ரஹ்மானும் அந்த அறையிலேயே அவரை மருந்து வைத்துள்ளார்.

சாஜிதாவின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என போலீசில் புகார் அளித்து ரஹ்மான் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், அப்போது விசாரணையில் அவர் உண்மையை கூறவில்லை.

Also Read  கேரளா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 - இடதுசாரிகள் முன்னிலை..!

அந்த அறையில் கழிவறை இல்லாததால் சாஜிதா இரவு நேரத்தில் மட்டும் ஜன்னல் வழியாக வெளியே வந்து விட்டு உடனே திரும்பும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் போலீசுக்கு சாஜிதா குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது.

Also Read  கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

ரஹ்மானின் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு கூட சாஜிதா இருப்பது தெரிந்திருக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வெளியூரில் புதிய வேலை கிடைத்து இருப்பதாக குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார் ரஹ்மான்.

அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. நெல்வாரா பகுதியில் சாஜிதா உடன் வாடகை வீட்டில் ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார்.

Also Read  கேரள தொழில்நுட்ப மையத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெயரை சூட்ட முடிவு: முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு

ரஹ்மான் குறித்து எந்த தகவலும் இல்லாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது ரஹ்மானை அவர் சகோதரர் சாஜிதாவுடன் பார்த்துள்ளார்.

அதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர் தகவல் அறிந்த போலீசார். பின்னர் சாஜிதாவுக்கு இப்பொழுது 28 வயது என்பதால் அவரின் விருப்பதி பேரில் ரஹ்மானுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காதலியை ஒரே அறையில் 10 ஆண்டுகளாக மறைத்து வைத்து காதலன் குடும்பம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

அணிலுக்கு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கும் நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

Ramya Tamil

‘ரிமோட் ஓட்டிங்’ – தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தந்த புது தகவல்…!

Devaraj

கம்பளா போட்டியில் இந்தியாவின் உசேன்போல்ட் சாதனை…!

Devaraj

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

கொரோனாவை விரட்ட மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் – வதந்தியால் பலியான பரிதாபம்

Devaraj

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

Tamil Mint

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

உணவு, தண்ணீர் மூலம் பரவும் கொரோனா: திடுக் தகவல்

Tamil Mint

கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி

Tamil Mint