உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வழங்குக!!! பிரதமருக்கு பா.ஜ.க எம்.பி கடிதம்…


உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா 1 கோடி வழங்க வேண்டும் – பாஜக எம்.பி வருண் காந்தி பிரதமருக்கு கடிதம்.

மக்களவை உறுப்பினர் வருங்காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஓராண்டாக 3 வேளான் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பெருந்தன்மைக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்திலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் இன்னுயிரை மாய்த்து உள்ளனர்;

Also Read  "தமிழகம் சிறக்கும்!" - தமிழகத்தின் வேளாண் பட்ஜெட்டுக்கு கமல்ஹாசன் வரவேற்பு ..!

ஒருவேளை பிரதமர் தன் முடிவை முன்னரே எடுத்து இருந்தால் ஒருவேளை அவர்கள் யாரும் பலியாகி இருக்க மாட்டார்கள் எனவும் உயிரிழந்த விவசாய்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அக்கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார். மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான FIR பதிவுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் உச்சபட்ச நிலைப்பாட்டின் விளைவு தான் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை என தெரிவித்துள்ள வருண் காந்தி அதில் சம்மந்தப்பட்ட மத்திய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read  இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம்..! - மத்திய அரசு

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் வருண் காந்தி லக்கிம்பூர் விவகாரத்தின் போது, மத்திய இணை அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்ட காரணத்தினால் “பாஜக தேசிய செயற்குழு உறுபினர்கள்” பட்டியலில் இருந்து வரும் காந்தியை பாஜக தலைமை நீக்கியது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சொத்து கேட்டு மகன் தொல்லை” நீதிபதிக்கு சொத்தை எழுதித் தந்த முதியவர்….

Lekha Shree

மருத்துவமனை தரையை சுத்தம் செய்த அமைச்சர்…!

sathya suganthi

சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

கொரோனா பரவலை தடுக்க 11 மணி நேர ஊரடங்கு

Devaraj

“பெண்களின் உத்தரவை ஏற்க சில ஆண்கள் தயாராக இல்லை” – குஷ்பூ

Shanmugapriya

கொரோனா விதிமீறல்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!

suma lekha

ராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு… அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்..!

suma lekha

நகர்ப்புறங்களில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கத் திட்டம்

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

உலோகக் கழிவுகளால் பிரதமர் மோடிக்கு சிலை.!

suma lekha

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj