தங்க மீன்கள் அழகான ஆபத்து! – எச்சரிக்கும் அமெரிக்க அதிகாரிகள்..!


மக்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கோல்ட் ஃபிஷ் எனப்படும் தங்க மீன்களை பொது ஏரிகளில் விட வேண்டாம் என அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த பர்ன்ஸ்வில் நகர அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

வீட்டில் வளர்க்கப்படும் இந்த தங்க மீன்கள் ஏரிகளில் மிகப்பெரிதாக வளர்வதோடு ஏரியின் ஒட்டுமொத்த சூழலையும் பாதிக்கின்றது என கூறுகின்றனர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த பர்ன்ஸ்வில் நகர நிர்வாகம் கணக்கெடுப்பின்போது ஏரி பகுதியில் பிடிபட்ட இராட்சத தங்க மீன்களை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த ட்விட்டர் பதிவில், “தயவு செய்து நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான தங்க மீன்களை ஏரிகள் மற்றும் குளங்களில் விட வேண்டாம். அவைகள் நீங்கள் நினைப்பதை விட பெரிதாக வளர்கின்றன.

Also Read  பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

மேலும், அவை ஏரி மற்றும் அடி பகுதிகளை கிளறுவது மற்றும் செடி கொடிகளை நாசம் செய்வதால் நீரின் தரம் பாதிக்கப்படுகிறது” என பதிவிட்டுள்ளனர்.

தங்க மீன்கள் Invasive Species ஆக பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தங்க மீன்களை பொது ஏரி மற்றும் குளங்களில்விடுவது சட்டத்துக்கு புறம்பானது.

Also Read  பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! - திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

பொதுவாக வீட்டில் வளர்த்தால் இரண்டு இன்ச் அளவுக்கு வளரும் தங்க மீன்கள் ஏரி போன்ற நீர்நிலைகளில் விட்டால் அது பல மடங்கு பெரிதாக வளரும். அதை பிடிப்பதும் சிரமம் என்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும் தங்க மீன்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை எனவும் மற்ற உயிரினங்களை அழித்து ஆதிக்கம் செலுத்தக் கூடியது எனவும் கூறியுள்ளனர்.

Also Read  விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

எனவே தங்க மீன்களுக்கு புதிய வீடு கண்டுபிடிக்கும் மற்ற வாய்ப்புகளை ஆராயுமாறு பர்ன்ஸ்வில் நகர அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது போலவே கர்வர் கவுண்டி பகுதியிலும் இதே பிரச்சினை உருவாகியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டு ஒரு இளைஞர் சுமார் 2.2 கிலோ எடை கொண்ட தங்க மீனை டார்செட்டில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வடகொரியாவின் கடலுக்கடியில் பாயும் ரகசிய ஏவுகணை…

VIGNESH PERUMAL

இந்தியர்களுக்கு அனுமதி – பச்சைக்கொடி காட்டிய யுஏஇ…!

Lekha Shree

பேஸ்புக்கின் ‘ரீட் பர்ஸ்ட்’ வசதி சோதனை முறையில் இன்று அறிமுகம்!

Lekha Shree

குரங்குகளை தாக்கும் வினோத வைரஸ்! – ‘மங்கி பி’ தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…!

Lekha Shree

மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய எஜமானரை செல்போன் அருகே இழுத்துவந்து அவசர எண்ணுக்கு அழைக்க உதவிய நாய்!

Tamil Mint

வாட்ஸ் அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்

Tamil Mint

அழியும் காபிச் செடிகள் – எதிர்காலத்தில் காட்டுவகை காபி தான் கைக்கொடுக்குமாம்…!

Devaraj

ஐஸ்லாந்து மலையில் பெருக்கெடுத்து ஓடும் சூடான லாவா…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

தூக்கத்தில் Earbud-ஐ விழுங்கிய நபர்! – அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

ரீடிமர் சிலையை விட உயரமான இயேசு கிறிஸ்து சிலை…!

Devaraj

சோம்பேறிகளுக்கு கொரோனா எமனாக மாறலாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

இனி முகக்கவசம் அணிய தேவையில்லை…! – எங்கு தெரியுமா?

Lekha Shree