a

ரூ.215 கொடுத்து கூகுள் வலைதளத்தை வாங்கிய அர்ஜென்டினா வெப் டிசைனர்…!


பிரபல நிறுவனங்களின் வலைதளங்களை பல லட்சம் ரூபாய் கொடுத்து தான் வாங்க வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், கூகுள் வலைதளத்தை ஒருவர் வெறும் ரூ.215 கொடுத்து வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜென்டினாவில் கடந்த 21 ஆம் தேதி அந்நாட்டுக்கான கூகுள் வலைதளம் சரியாக வேலை செய்யாத நிலையில், இது குறித்த ஆராய்ச்சியில் தலைநகர் பியூனஸ் ஏரிஸைச் சேர்ந்த நிகோலஸ் என்ற வலைதள வடிவமைப்பாளர் இறங்கி உள்ளார்.

Also Read  ஒப்போவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்…!

www.google.com.ar வலைதளத்தை இணையத்தில் தேடியபோது அது சரியாக வேலை செய்யவில்லை என்பதை அறிந்த நிகோலஸ், `.ar’ வலைதளங்களை நிர்வகிக்கும் நெட்வொர்க் இன்ஃபர்மேஷன் சென்டருக்குள் சென்று கூகுளைத் தேடிப் பார்த்துள்ளார்.

அப்போது, அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளத்தை வாங்கலாம் எனக் காட்டியதாகவும், அந்த வலைதளத்தை வாங்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றியதாகவும் நிகோலஸ் கூறியுள்ளார்.

Also Read  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை - யுஜிசி அறிவிப்பு

அதன் பிறகு, கூகுள் வலைதளத்தை தான் வாங்கியதற்கான ரசீது மின்னஞ்சலுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நிகோலஸ் பதிவிட, கூகுள் வலைதளத்தை குறைந்த விலைக்கு வாங்கிய நபர் என்ற பெருமையுடன் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளத்தை வேறு ஒருவர் கைப்பற்றி வைத்திருந்ததாகவும் தங்கள் வலைதள உரிமைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீண்டும் தாங்களே பெற்றுவிட்டதாகவும் இது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Also Read  ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர்! - காரணம் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு சென்ற புதிய வகை கொரோனா!!

Tamil Mint

பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்…

VIGNESH PERUMAL

புதிய ஆப்பிள் ஐபோன் அறிமுகம்

Tamil Mint

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில் மாற்றம்

Tamil Mint

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

அமெரிக்க சுகாதாரத்துறை பதவியில் திருநங்கை மருத்துவர்; குவியும் பாராட்டு

Devaraj

விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக பெர்சிவரன்ஸ் அனுப்பியுள்ள செல்ஃபி… நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Lekha Shree

ஐநா சபையில் பிரதமர் மோடியின் உரை

Tamil Mint

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

ராணுவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க அமெரிக்கா தாயார்..

VIGNESH PERUMAL