இளம்பெண்ணின் கழுத்தில் குத்திய தையல் ஊசி… அறுவை சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..!


கோவையை சேர்ந்த பெண்ணின் கழுத்தில் குத்தி இருந்த 7.50 செ.மீ., நீள தையல் ஊசியை பாதுகாப்பாக அகற்றி அவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

கோவை, தியாகராய நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் தற்கொலை முயற்சி செய்த போது கழுத்து அறுபட்ட நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read  தமிழகத்தின் இந்த இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் வெளிப்புற காயங்கள் இருந்ததால் முதலுதவி செய்தனர். ஆனால், தொடர்ந்து வலியால் அவதிப்பட்டதால் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அதில் கழுத்து தண்டுவடப் பகுதியில் மூளைக்கு செல்லும் முக்கியமான ரத்த குழாய் அருகில் 7.50 சென்டிமீட்டர் நீளமுள்ள தையல் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது.

Also Read  அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

பின்னர் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூளை தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் இணைந்து ஆலோசித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

நவீன சி-ஆரம் எக்ஸ்ரே கருவி மூலம் ஊசி இருக்கும் இடத்தை உறுதி செய்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஊசி பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது.

Also Read  அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - உயர்கல்வித்துறை உத்தரவு!

அறுவை சிகிச்சையின் போது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய், தண்டுவடப் பகுதி, நரம்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் சிகிச்சைக்கு பிறகு நோயாளி நலமாக உள்ளார் என்றும் மருத்துவமனை டீன் நிர்மலா கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது – எடப்பாடி பழனிசாமி!

suma lekha

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

Lekha Shree

செந்தில் பாலாஜிக்கு செக்: கொதித்தெழுந்த திமுக சீனியர்ஸ்.!

mani maran

1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை முடிவு

Tamil Mint

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

“நாளைய முதல்வரே” – அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்..!

Lekha Shree

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை

sathya suganthi

வரும் பத்தாம் தேதி முதல்வர் கன்னியாகுமரி பயணம்

Tamil Mint

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சற்று முன் காலமானார் – காவேரி மருத்துவமனை

Tamil Mint

நடிகை மீராமிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

suma lekha