அப்போ உலக சாதனை பெண்மணி: இப்போ ஊழல் ராணி: மாட்டிய ஸ்ரீதேவி.!


கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அரசு பெண் ஊழியர் ஒருவர் ரூ.5,000 கையூட்டு பெற்று கைதாகி உள்ள செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக இருப்பவர் ஸ்ரீதேவி.

Also Read  தமிழகம்: 18,000 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு!

இவர் இரண்டு கைகளால் 5 மொழிகளில் மிர்ரர் ரைட்டிங் எழுதி விருது பெற்றவர். அந்த பகுதியில் இந்திரா என்னும் பெண்மணி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

தனது சம்பள நிலுவை தொகையான ரூ.24,000-யை வழங்குமாறு ஸ்ரீதேவியிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

ஆனால் ரூ.5,000 லஞ்சம் கொடுத்தால் தான் நிலுவை தொகை கிடைக்கும் என சொல்லி இருக்கிறார் ஸ்ரீதேவி.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கே லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இந்திராவிடம் கொடுத்து ஸ்ரீதேவியிடம் கொடுக்க கூறியுள்ளனர்.

Also Read  "தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

ஸ்ரீதேவி ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

உலக சாதனை புரிந்த பெண்மணி இப்படி ஊழல் ராணியாக மாறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க லஞ்சம்… 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

Lekha Shree

வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

Tamil Mint

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Tamil Mint

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா

Tamil Mint

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Tamil Mint

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Mint

43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் தி.மு.க வெற்றிபெற்றதில்லை: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

முதல்வரிடம் கவர்னர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்

Tamil Mint

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree

கோவை, காஞ்சி மாவட்ட கலெக்டர்களுக்கு வைரஸ்… மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுமா?

Tamil Mint

‘சிங்கார சென்னை 2.0’ – புதிய திட்டத்தை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி..!

Lekha Shree