தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய்…! மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்…! அறிகுறி என்ன?


தமிழ்நாட்டில் கொரோனா வைரசில் இருந்து மீண்ட 32 வயதான சென்னை இளைஞர் ஒருவருக்குப் பச்சை பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் எனப் பல பகுதிகளிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல நாட்டில் சிலருக்கு வெள்ளை பூஞ்சை மற்றும் பச்சை பூஞ்சை பாதிப்புகளும்கூட ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது ஒருவருக்குப் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 32 வயது நபருக்குப் பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும் அவருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னர், அவருக்கு உடல் சோர்வு, உடல் வலி, மஞ்சள் நிறத்தில் சளி, மூக்கிலிருந்து ரத்தம் வெளியேற்றம், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எண்டோஸ்கோப்பி சோதனையில் பச்சை பூஞ்சை பாதிப்பு உறுதியான நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட டிஸ்யூக்கள் நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொரோன வைரசால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆன்டிபாடி மாத்திரைகள் வழங்கப்படும் நிலையில் உடல் மிகப் பலவீனமாக இருக்கும் என்றும் அப்போது பூஞ்சை பாதிப்பு எளிதாக ஏற்படும் என்றும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கே பூஞ்சை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என்றும் விளக்கமளித்தனர்.

Also Read  இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெக்னாலஜிக்கு தாவிய டாஸ்மாக்: குவார்ட்டர் வாங்க கம்ப்யூட்டர் பில்

Tamil Mint

பிளஸ் 1, பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம்

Tamil Mint

ரஜினி கட்சியின் பெயரும், சின்னமும் இதுவா?

Tamil Mint

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Devaraj

தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இன்று திடீரென டெல்லி செல்கின்றனார்.

Tamil Mint

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

பிளாஸ்டிக்கால் அழியும் நீர்ப்பறவைகள்? எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

Lekha Shree

ஊரடங்கும் மேலும் தளர்வுகள்: இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்

Tamil Mint

இ-பாஸ் தொடர வேண்டும்: முதல்வர் திட்டவட்டம்

Tamil Mint

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

sathya suganthi

17 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு

Tamil Mint