‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!’ – கொய்யா பழத்தை அதிகமாக உண்ண கூடாதாம்… ஏன் தெரியுமா?


கொய்யா பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடவும் கூடாது.

கொய்யாவை நிறைய சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம். அதிகமாக கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலின் செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.

ஏனென்றால் அதில் இருக்கும் பிரக்டோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை, நாம் கொய்யாவை அதிகமாக சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாகாது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலில் நிலையான ரத்த சர்க்கரை அளவு இருப்பது மிகவும் அவசியம். கொய்யாப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று சில சுகாதார ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Also Read  சம்மர் ஃபுரூட் தர்பூசணியால் கிடைக்கும் 5 நன்மைகள்…!

அதேபோல் சிலபேருக்கு கொய்யா சாப்பிட்டாலோ அல்லது அதிக அளவு சாப்பிட்டாலோ சில நேரங்களில் வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சல் கொண்ட உணர்வு ஏற்படும்.

கொய்யாவில் உள்ள விதைகளால் இது நிகழ்கிறது. இந்த விதைகள் இருப்பது பழத்திற்கு அவசியம் என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சிலருக்கு ஒத்துக் கொள்ளாது.

Also Read  அடர்த்தியான தலைமுடி பெற உதவும் மூலிகை எண்ணெய்! வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

அதே போல் இயற்கையாக காடுகளில் வளரும் பழங்கள் பாக்டீரியா மாசுபாட்டால் பாதிக்கப்படும். இந்த பாக்டீரியாக்கள் நீர் மற்றும் மண் வழியாக கொய்யா போன்ற பழங்களில் ஒட்டிக்கொள்ளும்.

பழத்தின் வெளிப்புறம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் பாக்டீரியாக்களால் உள்ளே செல்ல முடியும். அதனால், கொய்யாவை உட்கொள்ளும் போது எப்போதும் கவனமாக இருப்பது அவசியமாக உள்ளது.

Also Read  ஆரோக்கியமற்ற உணவால் கொரோனா அதிகரிக்குமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..!

எந்த ஒரு உணவை எடுத்துக்கொண்டாலும் அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு தான் விளைவிக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

Zinc குறைபாட்டிற்கு சிறந்த உணவு வகைகள்…! லிஸ்ட் இதோ..!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

HariHara Suthan

கோடை காலத்து சரும பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் இதோ…!

Lekha Shree

ஆரோக்கியமற்ற உணவால் கொரோனா அதிகரிக்குமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..!

Lekha Shree

அடிக்கடி ஆவி பிடிப்பது நுரையீரலை பாதிக்குமா? உண்மை என்ன?

Lekha Shree

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

வெயிட் லாஸ் செய்ய சிறந்த 5 காலை உணவுகள்!

Lekha Shree

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்..! முழு விவரம் உள்ளே ..!

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை செய்தால் போதும்..!

Lekha Shree

முகப்பரு பிரச்சனைக்கு சிறந்த பலனளிக்கும் ரோஸ் வாட்டர்!

Lekha Shree

World No Tobacco Day 2021: புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்?

Lekha Shree