a

கொரோனா தடுப்பூசி போடப் போகிறீர்களா? உங்களுக்கான அறிவுரைகள் இதோ…!


கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பொருட்டு நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அதே சமயம் கொரோனா தடுப்பூசி குறித்த பல்வேறு அச்சங்கள் மக்களிடையே நிலவி வருகிறது.

தடுப்பூசி போடுவதற்கு முன்பும் போட்டதற்கு பின்பும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த சந்தேகங்களும் உள்ளன.

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கொடுத்துள்ள அறிவுரைகளின் முழு விவரம் இதோ…!

தடுப்பூசி போடுவதற்கு முன்பு 2 நாட்களும், பின் 14 நாட்களும் மது குடிக்க வேண்டாம்.

ஊசி செலுத்திக்கொண்ட நாளில் புகைக்க கூடாது

ஊசி செலுத்திக்கொண்டவர்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்த பின் பிற நோய்களுக்கான ஊசியை செலுத்திக்கொள்ளலாம்

முதல் தவணை ஊசி செலுத்திய பின், 90 நாட்களுக்கு தடுப்பு சக்தி கிடைக்கும். பின் குறையும்

Also Read  வீரியம் எடுக்கும் கொரோனா! - அபாயத்தை நோக்கி இந்தியா?

இரண்டாவது தவணை ஊசி செலுத்திய பின் முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது

கொரோனா தாக்கி குணமானவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள் 12 வாரங்கள் கழித்து ஊசி செலுத்திக்கொள்ளலாம்

உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோயாளிகள் அவற்றிற்கு மருந்து சாப்பிடுபவர்கள் ஊசி செலுத்திக்கொள்ளலாம்

அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஸ்டென்ட் பொருத்திக்கொண்டவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள் ஊசி செலுத்திக் கொள்ளலாம்

Also Read  கொரோனாவால் மரித்து போன மனிதம் - கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

இருதய நோய்க்கு ஆஸ்பிரின், குளோபிடோகிரில், டிக்காகிரிலர் போன்ற மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் ஊசிசெலுத்திக்கொள்ளலாம்

ஹெப்பாரின், வார்பாரின், அசிட்ரோம் போன்ற ரத்த உறைவுத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் ஊசி செலுத்துவதற்கு முந்தைய நாளிலும் ஊசி செலுத்திக்கொள்ளும் நாளிலும் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்
பக்கவாதம், மன நோய், வலிப்பு நோய், பார்க்கின்சன் நோய், மறதி நோய், அல்சீமர் நோய் போன்ற மூளை, மனம், நரம்பு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள், ஊசி செலுத்திக்கொள்ளலாம். வழக்கமான மாத்திரைகளை நிறுத்த வேண்டியதில்லை

ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, ஒவ்வாமை தோல் நோய்கள், மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள் ஊசி செலுத்திக்கொள்ளலாம்

Also Read  அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெறவும்

ஊசி செலுத்திக்கொண்ட பெண்கள் 6 முதல் 8 வாரங்கள் கழித்து கர்ப்பத்துக்குத் தயாராகலாம்

சிறுநீரக மாற்றுச் சிகிச்சை உள்ளிட்ட ‘உறுப்பு மாற்று சிகிச்சை’ மேற்கொண்டவர்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்
புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் புற்றுநோய் சிறப்பு மருத்துவரின் ஆலோசனை பெறவும்

தடுப்பூசிக்குப்பின் வலி நிவாரணி மாத்திரைகள் எடுக்க வேண்டியிருந்தால் குடும்ப மருத்துவரின் ஆலோசனை பெறவும்

ஊசி செலுத்திய இரண்டு நாட்களுக்கு பின் எளிமையான உடற்பயிற்சி செய்யலாம். ஒரு வாரத்திற்கு பின் கடுமையான பயிற்சிகள் செய்யலாம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

Jaya Thilagan

விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி

Tamil Mint

முதலையை இழுக்கும் இளைஞர் – வைரல் ஆன வீடியோவால் சிக்கல்!

Tamil Mint

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பெண் காவலர்களுக்கான ஸ்பெஷல் உத்தரவு – டிஜிபி திரிபாதி அதிரடி…!

sathya suganthi

முழு ஊரடங்கான இன்று கொரோனா நிவாரண நிதி ரூ.2000 விநியோகம் உண்டா?

sathya suganthi

தனியார் ஆய்வகங்கள் மீது இந்த நம்பரில் புகாரளிக்கலாம்.. தமிழக அரசு அதிரடி..

Ramya Tamil

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

கிடு கிடுவென குறையும் தங்கத்தின் விலை

Tamil Mint

தாயை குளியல் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்!

Shanmugapriya

சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு; இல்லத்தரசிகள் கலக்கம்!

Bhuvaneshwari Velmurugan

வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா…! ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்…!

Devaraj