மருத்துவமனையாக மாறுகிறது ‘லீ மெரீடியன்’ நட்சத்திர ஓட்டல்…!


சென்னை கிண்டி மற்றும் கோவையில் உள்ள லீ மெரீடியன் நட்சத்திர ஹோட்டல் விரைவில் மருத்துவமனையாக மாறவிருக்கிறது.

இந்த ஹோட்டல்கள் விரைவில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமத்தின் வசமாக உள்ளது. தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமிக்கு சொந்தமான அப்பு ஓட்டல்ஸ் லிமிடெட் சென்னை கிண்டி மற்றும் கோவை ஆகிய இடங்களில் நட்சத்திர ஹோட்டல்களை நடத்திவந்தது.

இந்த அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதிக் கழகத்துக்கு சுமார் 18 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்து இருந்தது.

இந்த நிலுவைத் தொகை செப்டம்பர் 2019ல் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. நிலுவைத் தொகையை செலுத்தும் நிலையில் அப்பு ஓட்டல்ஸ் இல்லை என கூறி இந்திய சுற்றுலா நிதிக் கழகம் திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Also Read  தமிழகத்தில் கருப்புப்பூஞ்சை நோயால் இதுவரை 847 பேர் பாதிப்பு…!

இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு மே5ம் தேதி ஏற்ற தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளை தொடர்ந்து விசாரணைக்கு நடத்தி வந்தது.

அப்போது மனு ஒன்றை தாக்கல் செய்தனர் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனர் பெரியசாமி கொரோனா ஊரடங்கு எதிரொலியாக பணம் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

Also Read  பிளஸ் 2 சிறப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தகவல்

மேலும், போதுமான அவகாசம் வழங்க நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடன்களை அடைப்பதற்காக அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விற்க சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதற்கான திட்ட அறிக்கைகளும் கோரப்பட்டது. மாதவ் திர், கோட்டாக், எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் தீர்மான திட்டத்தை தாக்கல் செய்திருந்தன.

அதில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் சமர்ப்பித்த ரூ.423 கோடி கையகப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிண்டியில் உள்ள லீ மெரீடியன் ஹோட்டலை மருத்துவமனையாக மாற்றவும் கோவையில் உள்ள கிளையை சீரமைத்து நட்சத்திர ஹோட்டலாகவே எடுத்து நடத்த அந்த குழுமம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே 1,641 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 4 மடங்கு மதிப்பு குறைத்து ரூ.423 கோடிக்கு எம்ஜிஎம் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழப்பு…!

Devaraj

“இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல்”

Tamil Mint

தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

suma lekha

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்…!

sathya suganthi

ஊரடங்கில் அடுத்த தளர்வுகள் என்னென்ன? – முழு விவரம் இதோ…!

sathya suganthi

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் செல்போனில் பேச்சு : அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்…!

sathya suganthi

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

Tamil Mint

கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்!!

Tamil Mint

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

Tamil Mint