இந்து மதம்னா நக்கலா போச்சா?…கொதித்த எச்.ராஜா..!


ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே வன்னியர் அமைப்பு பாமக உள்பட ஒரு சில அமைப்புகள் ஜெய்பீம் படக்குழுவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read  பெண்கள் விவகாரம்: மோடியை சாடிய கனிமொழி எம்.பி.,!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”ஜெய்பீம் படம் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள்.

அந்தோணிசாமி என்ற பெயரை மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள். அந்த காட்சியில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது.

காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள்?

இந்து மதம் என்றால் கிண்டலாக போய்விட்டதா? அந்த மகாலட்சுமி காலண்டரை நீக்கம் செய்ய வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எங்களுக்கு தெரியும். ஹிந்துக்களை சினிமா துறையும் கொச்சைப்படுத்துகிறது.

Also Read  "கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?" - கரூர் எம்.பி. ஜோதிமணி திடீர் போராட்டம்…!

நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்து மக்கள் கோவிலுக்கு போவதை இழிவாக பேசியுள்ளார். பிற மத வழிபாட்டு தலங்களை பற்றி பேசியிருக்கலாம். ஆனால் அப்படி பேசவில்லை. ஏனென்றால் அது அவர்கள் மதம்.

ஜெய்பீம் படம் வன்னியர் குல சமுதாயத்தையும் பட்டியல் சமுதாயத்தையும் சண்டைகளை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது” என்று எச்.ராஜா தெரிவித்தார்.

Also Read  ராமர் கோயில் கட்ட குவியும் நிதி - ரூ.2,100 கோடி வசூல்!

எச்.ராஜாவின் இந்த கருத்தால் மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஜெய்பீம் திரைப்படம் பேசு பொருளாக மாறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.50க்கு மேல் நன்கொடை வசூலிக்கக் கூடாது – பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு உத்தரவு

sathya suganthi

“நான் அந்த வார்டே இல்ல…!” – ஒரே ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்…!

Lekha Shree

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

“வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும்” – உதயநிதி ஸ்டாலின்

Shanmugapriya

“விரைவில் சந்திப்போம்!” – அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா அறிக்கை..!

Lekha Shree

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் அளித்த அசத்தல் பரிசு…!

Lekha Shree

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்…!

Lekha Shree

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

தைரியம் இல்லாத எடப்பாடி… கொத்தடிமை அமைச்சர்கள்: விளாசிய ஸ்டாலின்

Tamil Mint

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Lekha Shree

போலீஸ் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரம் : முதலைமைச்சரின் அதிரடி அறிவிப்பு

sathya suganthi

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree