’தனக்கு நேர்ந்தது யாருக்கும் நடக்கக்கூடாது’… எச்.வினோத்திடம் ’தல’ அஜித் பகிர்ந்தது என்ன?


தனியார் செய்தி ஊடகத்திற்கு வலிமை பட இயக்குநர் எச்.வினோத் அளித்துள்ள பேட்டியில் கூறிய சில விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை . இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இதற்கிடையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக சமீபத்தில் வலிமை படத்தின் ஷுட்டிங்கை முடித்து, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வலிமை படத்தின் BTS ஃபோட்டோக்கள், எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி வருகிறது.

Also Read  கொரோனா நிவாரணம் : நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் நிதி

இந்த நிலையில், தனியார் செய்தி ஊடகத்திற்கு வலிமை பட இயக்குநர் எச்.வினோத் அளித்துள்ள பேட்டியில் கூறிய சில விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

H. Vinoth - Wikipedia

அதில், வலிமை படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸ் அல்லது பிரசன்னாவை கமிட் செய்யலாம் அஜித் என்று கூறினாராம். ஆனால், வினோத் ஒரு சில நாள் கழித்து ‘சார் சார், ஏதோ எனக்கு செட் ஆகாத பீல்’ என்று அப்படத்தில் கார்த்திகேயாவை வில்லனாக கமிட் செய்தார்களாம். ஆனால் கார்த்திகேயாவின் முகத்தில் கொஞ்சம் தெலுங்கு சாடை தெரிகிறதால் அவரை மாற்றி விடலாமா? என்று எச்.வினோத் அஜித்திடம் கேட்டுள்ளார். அதற்கு அஜித்தோ, ’தயவு செய்து கார்த்திகேயாவை மாற்றிவிடாதீர்கள்’ என்று கூறி தனக்கு நடந்த அவமானதை எச்.வினோத்திடம் கூறியுள்ளார்.

Also Read  அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமில்லை… 3வது ராஷ்மிகா மந்தனாவுடன் இணையும் டாப் ஹீரோ…!

அஜித்தும் தனது ஆரம்ப காலத்தில் இதே போன்று ஒரு படத்தில் 2 நாட்கள் நடித்தாராம். ஆனால், அஜித்தை அப்படத்தில் இருந்து தூக்கிவிட்டார்களாம். அதன் பிறகு சென்ற இடமெல்லாம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்தே கேள்விகள் கேட்டார்கள். வெளியில் வருவதற்கே அவமானமாக இருந்தது. அதில் இருந்து மீண்டு வர தனக்கு 1 அரை வருடம் ஆகியது என்று தல அஜித் எச்.வினோத்திடம் கூறியது மட்டுமல்லாமல், தனக்கு நேர்ந்தது கார்த்திகேயாவுக்கும் நிகழ்ந்திட கூடாது என்று கூறி கார்த்திகேயாவையே வில்லனாக புக் செய்ததாக எச்.வினோத் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘விக்ரம்’ படத்தில் இணைந்த 2 சீரியல் நடிகைகள்? விஜய் சேதுபதிக்கு 3 ஜோடியா? குழம்பும் ரசிகர்கள்..!

Lekha Shree

பிரபு சாலமனின் படத்தில் நாயகியாக நடிக்கும் கோவை சரளா?

Lekha Shree

ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ‘அடிபொலி’ பாடலை புகழ்ந்த மோகன்லால்…!

Lekha Shree

“நீல உடையில் தங்க மயில்..!” – கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…! ஹார்டின்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Lekha Shree

விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்…!

Lekha Shree

முதல்ல மாஸ்க் போடுங்கடா,அப்புறம் RIP போடலாம்! நடிகர் விவேக்கின் ஆத்மா.. வைரலாகும் புகைப்படம்!

HariHara Suthan

“ஸ்பிரிட்”: ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் 25-வது படத்தின் டைட்டில்…!

Lekha Shree

“பண்டாரத்தி-மஞ்சனத்தி” தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன? – மாரிசெல்வராஜ்

Devaraj

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

வைரலான அஸ்வின்-சிவாங்கி திருமண வீடியோ – பதறியடித்து விளக்கம் அளித்த இளசுகள்…!

sathya suganthi