ஆன்லைன் வகுப்பால் அரிய வகை மன நோய் : மாணவியின் வயிற்றில் 1 கிலோ தலைமுடி அகற்றம்


விழுப்புரத்தில் வசித்து வரும் 15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு ஆன்லைன் வகுப்பால் அரியவகை மனச்சோர்வு ஏற்பட்டு, தன் தலைமுடியை பிய்த்து சாப்பிட்டு வந்துள்ளார்.

பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் தன் பாட்டியுடன் வீட்டில் இருந்த அச்சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதனை மேற்கொண்டபோது, வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்து அச்சிறுமியின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றினர்.

Also Read  ஆன்லைன் வகுப்பில் இருந்த மகள் நனையாமல் இருக்க குடை பிடித்து நின்ற தந்தை! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது நண்பர்களுடன் உரையாடிவிட்டு வீட்டுக்கு உற்சாகமாக வருவார்கள் என்றும் ஆனால், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் கற்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பால் அச்சிறுமிக்கு மனச்சோர்வு ஏற்பட்டு, தன் தலையில் உள்ள முடிகளை பிய்த்து சாப்பிட்டுள்ளார் என்றும் முடிகளால் ஆன இக்கட்டி சிறுகுடல் வரை பரவி இருந்தது என்றும் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Also Read  பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்.... துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டு‌ சிறை...

ஒரு குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பது போல இக்கட்டியை அகற்றியதாகவும் இதனை Rapunzel Syndrome என்று கூறுவார்கள் என்றும் உலக அளவில் 60 பேருக்கு இப்படிப்பட்ட கட்டிகள் பதிவாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது அச்சிறுமிக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…! 17 வயது சிறுவன் கைது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…! 17 வயது சிறுவன் கைது…!

sathya suganthi

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் தினகரன் மகளுக்கு பிரமாண்ட கல்யாணம்

Tamil Mint

யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்…. “நம் இன்பம், துன்பம் இரண்டு நமக்கு ஒன்றே”… இறப்பிலும் இணைபிரியாத அன்பு…..

VIGNESH PERUMAL

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்:

Tamil Mint

`தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்’… சீமான் அசுர வளர்ச்சி அடைந்தது எப்படி?

Lekha Shree

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் – சீமான் ட்வீட்!

Lekha Shree

“ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது திமுக… ஆனால் அழுத்தம் கொடுத்தது பாமக தான்” – ஆர்.எஸ். பாரதி

Lekha Shree

“30 நாட்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு” – டிஜிபி சைலேந்திர பாபு

Lekha Shree

தமிழக பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

Tamil Mint

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

Ramya Tamil

தேர்தல் அறிக்கையை கடைசி வரை கண்ணில் காட்டாத நாம் தமிழர் கட்சி…! கதறும் தமிழர்கள்…!

Devaraj

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint