a

பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே திருமண சடங்கு! – வைரலாகும் வீடியோ!


விடுமுறை கிடைக்காததால் ராஜஸ்தானில் பெண் காவலர் ஒருவருக்கு திருமணத்துக்கு முன் நடத்தப்படும் மஞ்சள் பூசும் விழா காவல் நிலையத்திலேயே நடைபெற்றது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இதனால், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் விடுமுறை இல்லாமலும், நேரம் பார்க்காமலும் பணியாற்றி வருகின்றனர்.

Also Read  மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று...

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்ப்பூர் காவல் நிலையத்தில் பணி புரிந்துவரும் பெண் காவலர் ஒருவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவருக்கு வருகிற 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

ஆனால், திருமணத்திற்கு முந்தைய சடங்குகளுக்கு விடுமுறை கிடைக்காததால் காவல் நிலையத்திலேயே மஞ்சள் பூசும் விழாவை சக காவலர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

Also Read  ஆரோக்கியமற்ற உணவால் கொரோனா அதிகரிக்குமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..!

அந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விடுமுறை மற்றும் ஓய்வு இல்லாமல் பணியாற்றி வரும் காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய கன்னடா ஹீரோ! – சேவைக்கு குவியும் பாராட்டுக்கள்!

Shanmugapriya

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

Ramya Tamil

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் – தமிழக அரசு

Devaraj

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil

பிரான்சில் கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

Devaraj

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவச உணவு அளிக்கும் அமைப்பு!

Shanmugapriya

சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

Devaraj