ரூ.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் பறிமுதல்? ஹர்திக் பாண்டியா விளக்கம்..!


துபாயில் இருந்து திரும்பிய போது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ரூ. 5 கோடி மதிப்பிலான இரண்டு வெளிநாட்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.

ஆனால், இதனை மறுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், “என்னிடமிருந்து இரண்டு கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு கைக்கடிகாரம் மட்டுமே என்னிடம் இருந்தது.

Also Read  ஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் - பிரசாந்த் கிஷோரின் வியூகம் தொடர்ந்து கைக்கொடுக்குமா?

அதுவும் விமான நிலையத்துக்கு வந்ததும் நானே முன்வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் சென்று நான் கைக்கடிகாரம் கொண்டு வந்திருக்கும் தகவலை தெரிவித்தேன்.

ஆனால், சமூக ஊடகங்களில் நான் ஏதோ ஏமாற்றும் நோக்கில் கைக்கடிகாரத்தை மறைத்து கொண்டு வந்தது போல் தகவல் வெளியாகி இருக்கிறது.

நான் அந்த கைக்கடிகாரத்தை துபாயில் வாங்கினேன். அதற்கான வரியை எங்கு கட்ட சொன்னாலும் அதனை கட்ட நான் தயாராக உள்ளேன். நான் கடிகாரத்தை பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களை கேட்டன.ர் நான் ஆவணங்களை கொடுத்துள்ளேன்.

அவர்கள் அதற்கான சுங்கவரி மதிப்பீட்டை செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பீட்டு தொகையை சொன்னவுடன் வரியை செலுத்த போகிறேன்.

Also Read  மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நான் தேசத்தின் சட்டத்தை மதித்து நடப்பவன். நான் அரசாங்கத்தின் அனைத்து துறைகளையும் மதிக்கிறேன். எனது கோரிக்கைகளுக்கு சுங்கத்துறையினர் ஒத்துழைப்பு தந்துள்ளனர். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.

நான் சட்டத்தை மீறி விட்டதாக பரவி வரும் தகவல்கள் பொய். அதேபோல் நான் கொண்டு வந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ. 5 கோடி என்பதும் தவறானது” என கூறியுள்ளார்.

Also Read  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூகுள் பே பயணர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம்…!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவச உணவு அளிக்கும் அமைப்பு!

Shanmugapriya

கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Devaraj

2வது டி20 போட்டி: வெற்றியை தொடருமா இளம் இந்திய அணி.!?

suma lekha

பட்டப்பகலில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்று பணம் கொள்ளை!!!

Lekha Shree

விவாசயிகள் போராட்டத்தில், பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி கேட்ட ராகுல் காந்தி

Tamil Mint

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

கோப்பையை மட்டும் அல்ல நெட்டிசன்களின் மனதையும் வென்ற கோலி…!

Lekha Shree

மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் – துணை முதல்வர்

Tamil Mint

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!

Lekha Shree