ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தொடை_நடுங்கி_அண்ணாமலை ..! நடந்தது என்ன?


மின்வாரிய துறையில் முறைகேடு நடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டி இருந்தார்.

அவரது இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது.

Also Read  "democracy or democrazy?" - நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை” என பதிவிட்டிருந்தார்.

இதன்பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், “அமைச்சர் சேகர்பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என கூறியுள்ளதாக அறிகிறேன். தொட்டு பார்க்கட்டும் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்போம்.

ஒரு ஹார்பர் தொகுதியிலிருந்து சேகர்பாபு அரசியல் செய்கிறார். பாஜக 11 கோடி உறுப்பினர்கள் கொண்டது. சேகர் பாபு, செந்தில் பாலாஜி ஆகியோர் ஒரு தொகுதியோட ராஜாவாக சுற்றி வருகின்றனர். ஊழல் செய்தால் தட்டிக் கேட்போம்.

பாஜகவில் இருக்கும் பெண்களை ஆபாசமாக பேசியதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் பேருக்கு கட்சியை விட்டு அவர்கள் நீக்கப்படுகின்றனர். அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாசமாக பேசுபவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது. காவல்துறை நேர்மையாக இருந்தால் சரி சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also Read  தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் அளித்த அசத்தல் பரிசு…!

பாஜக மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும். தமிழக முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும்.

ஊழலை எதிர்க்க வேண்டும். அமைச்சரும் புரிந்து கொண்டு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சரியாக பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம். ஒரு தொகுதியில் அரசியல் செய்பவர்கள் இங்கு வந்து மிரட்டல் விடுக்கக்கூடாது” என கூறியிருந்தார்.

Also Read  தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

இதனால், திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகளும் அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறையில் முறைகேடு நடந்துள்ள ஆதாரத்தை அண்ணாமலை 24 மணிநேரத்தில் வெளியிடவேண்டும் என கூறியிருந்தார்.

ஆனால், அந்த ஆதாரத்தை அண்ணாமலை வெளியிடவில்லை என திமுக ஆதரவாளர்கள், “ஆதாரம் எங்கே?” என சமூக வலைத்தளத்தில் கேள்வியெழுப்பி வர்கின்றனர்.

இதன்காரணமாக, #தொடை_நடுங்கி_அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேகின் கீழ் நெட்டிசன்கள் பலர் “ஆதாரம் எங்கே?” என கேட்டு ட்வீட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு? – திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம்..!

Lekha Shree

சென்னையில் இத்தனை பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தியாச்சு.!

suma lekha

நான் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல: ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Tamil Mint

பொதுமக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

sathya suganthi

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மீண்டும் திறப்பு

Tamil Mint

கொரோனா வார்டில் இருந்து தப்ப முயன்ற பெண் பலியான பரிதாபம்

Tamil Mint

தமிழகத்தில் மேலும் தீவிரமடையும் ஊரடங்கு…?

Ramya Tamil

புதுச்சேரியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி ஆட்சிதான் – அமித்ஷா திட்டவட்டம்!

Lekha Shree

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

டாஸ்மாக் கடைகள் திறப்பு – பாஜக போராட்டம்

sathya suganthi