a

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!


பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர், பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

Also Read  கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை என்ற நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் குறித்த விவரங்களுடன் சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட் செய்தார்.

இதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவதுடன், பயிற்சியாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Also Read  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் எஸ்பிபி

அதில், 50-60 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியாளர் நந்தனத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பது தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடந்தது.

அதைத்தொடர்ந்து நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read  புதுவை முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலை கரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் மீது மேலும் 7 பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இந்த புதிய புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை நாகராஜன் மீது 17 பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளி மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் வெளியிட்ட இளைஞர்… திடுகிட்ட மாணவிகள்…..

VIGNESH PERUMAL

போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம்

Tamil Mint

நாளை முதல் சென்னை-திருப்பதி இடையே ரயில் சேவை தொடக்கம்

Tamil Mint

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்

Tamil Mint

முதல்வராக வேண்டும் என கனவு கூட காண முடியாது: எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்

Devaraj

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

Lekha Shree

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நெசவாளர்கள்: நிவாரண உதவி வழங்க கோரிக்கை

sathya suganthi

தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு – தேமுதிக கேட்கும் 23 இடங்களுக்கு தலையசைக்குமா அதிமுக…!

Jaya Thilagan

அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை – ஆளுநர்

Tamil Mint

அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு – எவற்றிற்கெல்லாம் அனுமதி? – முழு விவரம்

sathya suganthi

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree

“சசிகலா அதிமுக கட்சியிலேயே இல்லை” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!

Lekha Shree