a

தடகள பயிற்சியாளர் மீது குவிந்த பாலியல் புகார்கள் – நாகராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!


தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து சென்னை போக்சோ நீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர், பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை என்ற நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் குறித்த விவரங்களுடன் சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட் செய்தார்.

Also Read  "ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

இதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவதுடன், பயிற்சியாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அதில், 50-60 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியாளர் நந்தனத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பது தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடந்தது.

Also Read  14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

அதைத்தொடர்ந்து நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் நாகராஜன் மீது மேலும் 7 பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இந்த புதிய புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறினர்.

Also Read  வாக்குச்சாவடியில் சிவகுமாராக மாறிய அஜித்…! "தல"யை டென்சனாக்கிய செல்பி பாய்...!

இந்நிலையில் தற்போது சென்னை போக்சோ நீதிமன்றம் நாகராஜனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுகிறதா தேமுதிக?

Tamil Mint

சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

sathya suganthi

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

sathya suganthi

வாக்களிக்க செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; செல்போனுக்கு தடை..!

Lekha Shree

கூலித்தொழிலாளர் தலை வெட்டி கொலை: மதுரையில் நடந்த பகீர் சம்பவம்

Tamil Mint

சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

Lekha Shree

பாமக மீது நடவடிக்கை கோரி மனு

Tamil Mint

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா

Tamil Mint

அமைச்சரவைக்குள் பூசல்? சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வர தாமதம்: பாதியில் வெளியேறிய சட்ட அமைச்சர்

sathya suganthi

ஆன்லைனில் பொதுத்தேர்வுகள்? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree