a

13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை


அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Also Read  கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 4 செ.மீ. மழை பெய்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

இன்றும் நாளையும் குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் நாளை வரை கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி வரை ன் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  தென்தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தற்போதைய வானிலை கணிப்புகளின் படி தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 1ஆம் தேதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் தென்மேற்கு பருவமழை கேரளப் பகுதிகளில் வருகிற ஜூன் 3ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது” – தமிழக அரசு

Lekha Shree

காலியாகும் கமல் கட்சி..? மேலும் ஒரு நிர்வாகி விலகல்..

Ramya Tamil

கொரோனா அறிகுறி இருந்தால் குப்புறப்படுக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி

sathya suganthi

சொத்து வரி செலுத்தினார் ரஜினி

Tamil Mint

ஜனவரி 4 ஆம் தேதி முதல் சென்னையில் கூடுதல் ரயில் சேவை

Tamil Mint

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

Ramya Tamil

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Lekha Shree

குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

Lekha Shree

பதிலடி கார்ட்டூனாம்-சுதீஷ் விளக்கம்

Tamil Mint

கட்டுக்கடங்காமல் சுற்றும் மக்கள்…! வாகன சோதனையை தீவிரப்படுத்தும் தமிழக அரசு…!

sathya suganthi

நூதன முறையில் நகை திருட்டு…! வசமாக சிக்கிய திருடர்கள்! எப்படி தெரியுமா?

Tamil Mint

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint