a

பிற்பகல் 1 மணி வரை காய்கறி, பழங்கள் விற்பனை – உதவி எண் அறிவிப்பு


கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Also Read  மத்திய குழுவினர் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வு

இந்த ஆலோசனைக் கூட்டத்தையடுத்து காய்கறி மற்றும் பழம் விநியோகத்தை கண்காணிக்க தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 044-22253884 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read  “கொரோனா தடுப்பூசிக்கு பயப்பட வேண்டாம்” - மு.க.ஸ்டாலின்

தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் காய்கறி மற்றும் பழங்கள் அந்தந்த பகுதிகளின் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலமும், சென்னையில் 1,610 வாகனங்கள் மூலமும் முழு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள், பழங்கள் விநியோகிப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Also Read  மின் கட்டணத்தை மக்களே கணக்கீடு செய்யலாம் - மின்வாரியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Lekha Shree

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு…!

sathya suganthi

சிவசங்கர் பாபா வழக்கு – சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை தலைமறைவு!

Lekha Shree

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் பணி தீவிரம்: அனைத்து ஆசிரியர்களும் வரும் 18-ம் தேதி பள்ளிக்கு வர உத்தரவு!

Tamil Mint

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Mint

பள்ளிக்கட்டணம்: உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Tamil Mint

உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!

sathya suganthi

தமிழக தேர்தல் முடிவுகள்.. எந்தெந்த அமைச்சர்கள் முன்னிலை..? யாரெல்லாம் பின்னடைவு..?

Ramya Tamil

“தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனி!” – சீமான்

Lekha Shree