பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கு தடை…! பாஜக அரசுக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்…!


உத்தரகண்டில் தீரத்சிங் ராவத் தலைமையிலான பா.ஜ.க. நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தின், இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம்.

கொரோனா காரணமாக தற்போது உத்தரகண்டின் சாமோலி, ருத்ரபிரயாக் மற்றும் உத்தர்காசி மாவட்டங்களைச் சேர்ந்தோர் மட்டும் யாத்திரை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்தது.

இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

Also Read  "ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்.." - உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

அப்போது, யாத்திரைக்கான நடைமுறைகள் தொடர்பான அரசின் அறிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் கும்பமேளாவிலும் இதேபோல் அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல், கொரோனா பரவல் அதிகரித்தது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கோவில் நிகழ்ச்சிகளை ‘டிவி’யில் நேரலையாக நாடு முழுதும் ஒளிபரப்புங்கள் என, தாங்கள் கூறுவது ஆன்மிக மரபுக்கு எதிரானது என்கிறீர்கள் என கூறிய நீதிபதிகள், ஆனால் சாஸ்திரங்கள் எழுதப்பட்டபோது, ‘டிவி’ போன்ற சாதனங்கள் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

Also Read  நரேந்திர மோடி மைதானத்திற்குள் இந்திய தேசிய கொடி தடை செய்யப்பட்டுள்ளதா? #FactCheck

மேலும், கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்றுவது மட்டுமே அவசியம் என்பதால், புனித பயணம் மேற்கொள்வதற்கான அரசின் உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

மணமேடையில் தூங்கிய மணமகன்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் சிங்கப்பூர் வகை கொரோனா வைரஸ்…?

sathya suganthi

மாற்று திறனாளிகளுக்கான 40% பணியிடங்களை அறிவித்த மத்திய அரசு

Tamil Mint

மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை காரணமாக காலமானார்

sathya suganthi

ராமர் கோயில் நிதி சேகரிப்பா? அல்லது தேர்தல் பிரச்சாரமா? பாஜகவின் புதிய யுக்தி!

Tamil Mint

இந்தியாவில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்

Tamil Mint

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” – நடிகர் சித்தார்த் ட்வீட்

Lekha Shree

மீண்டும் வரும் 2ஜி பூதம்

Tamil Mint

ஒரே சிகரெட் – 18 பேருக்கு பரவிய கொரோனா…!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree