a

கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளதா…! இதோ உங்களுக்கான சிம்பிள் அட்வைஸ்கள்…!


கொரோனா வைரசின் லேசான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல், வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

1.லேசான பாதிப்பில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் நீடித்தால் மருத்துவரை கலந்தாலோசித்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

2.60 வயதுக்கு மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நாள்பட்ட நுரையீரல் அல்லது கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், பெருமூளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவாலும் பாதிக்கப்படுகிறபோது, மருத்துவரின் ஆலோசனை பெற்றுத்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் செறிவு குறைந்தால், மூச்சுத்திணறலால் அவதியுற்றால் உடனே மருத்துவமனையில் சேர்ந்து விட வேண்டும்.

Also Read  முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!

3.வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் சூடான நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் அல்லது 2 முறை ஆவி பிடிக்க வேண்டும்.

4.தினமும் 4 முறை பாரசிட்டமால் 650 மி.கி. மாத்திரை எடுத்தும் காய்ச்சல் குறையாதபோது, டாக்டரை கலந்தாலோசிக்க வேண்டும். அவர் தினமும் 2 முறை நாப்ராக்சன் 250 மி.கி. மாத்திரை எடுக்க பரிந்துரைக்கலாம்.

5.5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் தொடர்ந்தால் புடசோனைட் மருந்தை தினமும் 2 முறை வீதம் 5 முதல் 7 நாட்களுக்கு இன்ஹேலர் மூலம் உள்ளிழுக்க வேண்டும்.

6.ரெம்டெசிவிர் போன்ற மருந்தை டாக்டர் பரிந்துரை பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஆஸ்பத்திரி அமைப்பில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவச உணவு அளிக்கும் அமைப்பு!

7.கொரோனா நோயாளியை வீட்டில் கவனிப்போர், நெருங்கிய தொடர்பில் இருப்போர் நெறிமுறைகள்படி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

8.நோயாளிகள் வீட்டில் நல்ல காற்றோட்டமுள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எப்போதும் அவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நோயாளியும், பராமரிப்பாளரும் என்-95 முகக்கவசம் அணிவது நல்லது.

9.எச்.ஐ.வி. நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் டாக்டர்களின் மதிப்பீட்டுக்குப் பின்னர்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படுவார்கள்.

Also Read  கொரோனா பரவல் அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு..! - எங்கு தெரியுமா?

10.நோயாளிகள் வீட்டில் நன்றாக ஓய்வு எடுப்பதுடன் நிறைய பானங்களை குடிக்கலாம்.

11.வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நோயாளிகள் உடல்நிலை மோசமடைந்தால் உடனே டாக்டரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

12.வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் அறிகுறிகள் தோன்றி 10 நாட்களான பின்னர் அல்லது அறிகுறியற்றவர்கள் கொரோனா மாதிரி எடுக்கப்பட்ட 10 நாட்களுக்கு பின்னர், 3 நாட்கள் காய்ச்சல் இல்லாத நிலையில் வெளியே வந்துவிடலாம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டது முடிவு அடைந்தபின்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 43 மொபைல் செயலிகள் தடை

Tamil Mint

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை: 16 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

மருத்துவமனையில் வைத்து கொரோனா நோயாளியை பாலியல் சீண்டல் செய்த மற்றொரு நோயாளி!

Shanmugapriya

கொரோனாவின் உரிமைக்காக குரல் கொடுத்த பாஜக முன்னாள் முதலமைச்சர்…!

sathya suganthi

புதிய கல்விக்கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார் .

Tamil Mint

“பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ரிசர்வ் வங்கி கவர்னர்

Lekha Shree

கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்த தந்தை; 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

Tamil Mint