1,46,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முற்றிலும் புதிய மனித இனம் கண்டுபிடிப்பு..!


முற்றிலும் புதிய மனித இனத்தின் மண்டை ஓடு ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மண்டை ஓடு நியாண்டர்தால் மற்றும் ஹோமோ எரக்டஸ் போன்ற ஆதி மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சியில் மிகவும் நெருங்கிய தொடர்புடைய இனம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு ‘டிராகன் மேன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மனித இனம் கிழக்கு ஆசியாவில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது சீனாவின் வடகிழக்கு பகுதியான ஹர்பினில் 1933ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஆனால், 2021ம் ஆண்டில் தான் அறிவியலாளர்களின் கவனத்திற்கு இந்த மண்டை ஓடு வந்துள்ளது.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

இந்தப் புதிய இனத்திற்கு ஹோமோ லாங்கி (Homo Longi) என பெயர் சூட்டியுள்ளனர். சீன மொழியில் லாங் என்றால் டிராகன் என்று அர்த்தம்.

இந்த மண்டை ஓடு சராசரி மனிதனின் மண்டை ஓட்டை காட்டிலும் பெரியதாக உள்ளது. மேலும், நமது இனத்தை சேர்ந்த மனிதர்களின் மூளையின் அளவை காட்டிலும் இது பெரியதாக உள்ளது.

Also Read  ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! - வைரல் வீடியோ

இந்த டிராகன் மேனுக்கு சதுரமான கண்களும் அடர்த்தியான புருவமும் அகலமான வாயும் பெரிய பற்களும் இருந்திருக்கும் என்றும் கட்டுமஸ்தான மற்றும் முரட்டுத்தனமான உடல் வாகு இருந்திருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த மண்டை ஓடு 1933ஆம் ஆண்டு ஹெய்லாங்கியாங் மாகாணத்தில் ஷங்குவா நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளர் ஒருவரால் இந்த மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த நதியினை கருப்பு டிராகன் எனவும் மக்கள் அழைத்துள்ளனர்.

Also Read  கூடி பயணிக்கும் யானைகள்…! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செப்டம்பர் மாதத்தில் டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் – எங்கு தெரியுமா?

sathya suganthi

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

இரண்டாக உடைந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

Shanmugapriya

3 மாதங்கள் கழித்து தனது கைக்குழந்தையை கண்ட தாய் !!!

Tamil Mint

28 பேருடன் ரஷ்ய விமானம் மாயம்…!

sathya suganthi

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Tamil Mint

டிக்டாக்கை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தை சீனா ஏற்க வாய்ப்பில்லை- சீன அரசு பத்திரிக்கை தகவல்

Tamil Mint

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

இந்திய உணவுக்காக எலிசபெத் ராணியின் டீ விருந்தை தவிர்த்த கிளிண்டன்? வெளியான உண்மை தகவல்!

Lekha Shree

அரசக்குடும்ப மம்மிகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு – புல்லரித்து போன பார்வையாளர்கள்…! கண்களை கவர்ந்த காட்சிகள் இதோ…!

Devaraj

கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு…!

sathya suganthi

ஏவுகணையை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

Tamil Mint